அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் வியூகத்தை அமைத்து வருகிறார்கள்.அந்தவகையில், தற்போது ஆளும் கட்சியாக இருந்து வரும் அதிமுக மறுபடியும் ஆட்சியைப் பிடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இதனால் மக்களிடையே மிகத்தீவிரமாக பிரச்சாரத்தையும் முன்னெடுத்து வருகின்றது அதிமுக.
அதிமுக கூட்டணியில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளும்,பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகளும்,ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் புரட்சி பாரதம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்பட இதர கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில்,அதிமுக கூட்டணியில் இருந்துவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதிக்கீடு செய்வதாக அதிமுக அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி அதிமுக ஒதுக்கி இருப்பதாக தெரியவந்திருக்கிறது.இந்த நிலையில்,கொங்கு மண்டலத்தில் இருக்கின்ற தொகுதியில் இரண்டு தொகுதிகள் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பாக கேட்கப்பட்டு இருப்பதாகவும், தெரிவிக்கிறார்கள்.பெருந்தலைவர் மக்கள் கட்சி சென்ற சட்டசபை தேர்தலின் பொழுது திமுக கூட்டணியில் இருந்தது.இந்தநிலையில், தற்சமயம் அதிமுக சார்பாக அந்த கட்சி போட்டியிட இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.
திமுக கூட்டணியில் இருந்த பெருந்தலைவர் மக்கள் கட்சி திடீரென்று அந்த கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணிக்கு சென்றதால் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல்கொண்டு அந்த கட்சியில் இருக்கின்ற முக்கிய தலைவர்கள் அனைவரும் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.