TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டமானது இன்று நடைபெற்ற நிலையில் முதல்வர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதில் வரப்போகும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல்வராக நிற்க போகிறார். தற்போது வரை விஜய் கூட்டணி குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதிமுக பாஜக என அனைவரும் தங்கள் சார்பாக வலை வீசி தான் வருகின்றனர்.
அதிலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தும் நாம் தனி கூட்டணி வைத்துக்கொள்ளலாம் அப்போதுதான் குடும்ப அரசியல் செய்யும் திமுகவை ஒழிக்க முடியும் என கூறினர். இவர்கள் தந்த ஆதரவுக்கு விஜய் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. அப்படி இருக்கையில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நாங்கள் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
நாங்கள் கொள்கை எதிரி மற்றும் பிளவுவாத சக்திகள் உடன் என்றைக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டணி வைக்க மாட்டோம். சுயநல அரசியல் லாபத்திற்காக பாஜகவுடன் கூடி குலைந்து கூட்டணி வைக்கும் திமுக, அதிமுக வை போல் தமிழக வெற்றிக் கழகம் இருக்காது என தெரிவித்துள்ளார். விஜய் இவ்வாறு கூறியதன் மூலம் கட்டாயம் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்பது தெரியவந்துள்ளது.
மாறாக தேமுதிக பாமக மற்றும் திமுக மீது அதிருப்தியிலிருக்கும் விசிக உள்ளிட்டவைகள் தனது பக்கம் கொண்டு வர முயற்சிக்கலாம் என கூறுகின்றனர்.