அதிமுக திமுக இனி இல்லவே இல்லை.. இதுதான் கடைசி!! விஜய்யின் தனி ரூட்டால் அதிரும் அரசியல் களம்!!

Photo of author

By Rupa

அதிமுக திமுக இனி இல்லவே இல்லை.. இதுதான் கடைசி!! விஜய்யின் தனி ரூட்டால் அதிரும் அரசியல் களம்!!

Rupa

AIADMK DMK is no more.. This is the last!! Vijay's unique political field is vibrating!!

அதிமுக திமுக இனி இல்லவே இல்லை.. இதுதான் கடைசி!! விஜய்யின் தனி ரூட்டால் அதிரும் அரசியல் களம்!!

மத்தியில் பல ஆண்டு காலமாக பாஜக காங்கிரஸ் என்ற இரு ஆட்சி முறை மட்டுமே  மாறி மாறி நடந்து வந்த வேலையில் மக்களும் மாற்றம் குறித்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தான் ஆம் ஆத்மி என்ற நடுநிலையான கட்சி உருவாகியது. இது வலது சாரி இடதுசாரி என்று இரு பக்கமும் இல்லாமல் பொதுப்படையாக உள்ளது.

இக்கட்சி வலதுசாரி இடதுசாரி என்ற இரு கட்சி உடைய கூட்டணிகளையும் தன் வசம் வைத்துள்ளது. இதே போல தான் தமிழ்நாட்டிலும் திமுக அதிமுக என்ற நிலை உள்ளது. மக்களும் மாற்றத்திற்குரிய அரசியலை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இந்த வேலையில் தான் விஜய் அவர்கள் கட்சி தொடங்கி,  மத்தியில் ஆம் ஆத்மி போலவே பொதுப்படையாக இருக்க திட்டமிட்டுள்ளாராம். வலது சாரி இடதுசாரி என்ற எந்த ஒரு பக்கமும் சாயாமல் தனித்து நிற்க உள்ளதாக கூறுகின்றனர்.

இவர் ஆரம்ப கட்டத்திலிருந்து தற்பொழுது வரை திமுகவை எதிர்த்து வருவதால் இவர் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைத்து விட்டால் வலதுசாரி என்ற பெயர் வந்துவிடும் என்பதற்காகவே வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து நிற்க போவதாக கூறுகின்றனர்.

இதற்கு மாறாக நாம் தமிழர் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை தன் வசம் படுத்த முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.இதே போல வலதுசாரியில் உள்ள சில கட்சிகளில் ஏதேனும் ஒன்றையும் தன் வசம் படுத்தி பொதுப்படையாக இருக்க திட்டமிட்டுள்ளாராம்.அந்தவகையில் கட்டாயம் பாஜகவுடன் கூட்டணி இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

தனி பெரும்பான்மையுள்ள நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியோடு கூட்டணி வைக்க விஜய் முன் வந்தாலும் முதல்வர் வேட்பாளர் யாராக இருப்பார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டு தேர்தல் களம் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று கூறுகின்றனர்.