ADMK DMK: திமுக அதன் கூட்டணி கட்சிகள் அதிருப்த்தியில் இருப்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக வின் 53 வது ஆண்டின் தொடக்க விழாவானது நெல்லை மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. இதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளும் கட்சியின் கூட்டணி குறித்து பேசியுள்ளார். அதில், கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டு விட்டது தீப்பிடித்து அனைத்தும் எரிந்து விடும் எனக் கூறியுள்ளார்.
நாம் சொந்த காலில் நிற்கிறோம். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. அந்த வகையில் செய்தி ஊடகங்கள் மூலம் பலவற்றிலும் கூட்டணி குறித்த புகைச்சல் பற்றிய தகவல்தான் அதிகம் உள்ளது. கூட்டணி பலமாக உள்ளது என ஆளும் கட்சி சொல்லிக் கொண்டாலும் அதனை அவர்களாலையே நம்ப முடியவில்லை.
இவ்வாறு பழனிச்சாமி அவர்கள் கூறுவதற்கு பல காரணம் உண்டு. சமீப காலமாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தை என இரு கட்சிகளும் திமுகவின் கூட்டணி குறித்து அதிருப்தியில் தான் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமாவளவன் எங்கள் ஆட்களிலிருந்து ஒருவர் கூட முதல்வராக முடியாது என வெளிப்படையாகவே கூறினார்.
இது ஒரு பக்கம் இருக்க காங்கிரஸ் நிர்வாகிகளும் தனித்து போட்டியிட வேண்டும் என கூறி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் திமுக மறைமுக கூட்டணியை பாஜக-வுடன் வைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றது. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கட்சிகள் கட்டாயம் துணை நிற்குமா என்பது எடப்பாடி கூறுவது போல் சந்தேகம்தான் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.