அதிமுக மாஜி அமைச்சரை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் திமுக.. பதறும்  எதிர்க்கட்சி!! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு!!

Photo of author

By Rupa

அதிமுக மாஜி அமைச்சரை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் திமுக.. பதறும்  எதிர்க்கட்சி!! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு!!

Rupa

AIADMK ex-minister sketched and lifted by DMK.. Opposition gets nervous!! ICourt action order!!

அதிமுக மாஜி அமைச்சரை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் திமுக.. பதறும்  எதிர்க்கட்சி!! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு!!

அதிமுக ஆட்சியில் இருந்தபோது பல குற்றங்களில் ஈடுபட்டது தற்பொழுது ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் நிலையில் அதில் ஒன்றான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மருமகன் நவீன் குமார் மற்றும் அவரது சகோதரர் மகேஷுக்கு உண்டான நில தககாரரில் அமைச்சர் ஜெயக்குமார் தலையிட்டு நிலத்தை அபகரித்து கொடுத்துள்ளார்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகனின் விருப்பத்திற்கு ஏற்ப என்னிடம் கொலை மிரட்டல் விடுத்து நிலத்தை அபகரித்து கொண்டுள்ளனர் என ஜெயக்குமார் மருமகனின் சகோதரர் மகேஷ் புகார் அளித்தார்.

அவர் புகார் அளித்ததை அடுத்து அமைச்சர் ஜெயக்குமார் அவரது மகள் ஜெயப்பிரியா, அவருடைய மருமகன் நவீன் குமார் என மூவர் மீதும் கொலை மிரட்டல், சதி திட்டம் என ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு தங்கள் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறிய புகார் வழக்கை ரத்து செய்யும்படி மூவரும் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தனர்.

இதனையடுத்து உயர்நீதிமன்றம் ஆனது சொத்து அபகரிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு அதனை ஒப்புக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து மேல்முறையீட்டு வழக்கு தொடுத்தது.இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அவ்வாறு வழக்கு விசாரணைக்கு வந்ததை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் இவ்வாறு தனது மருமகனின் சகோதரரிடம் இருந்து அவதூறாக நில அபகரிப்பு செய்தது குறித்து பதில் அளிக்க வேண்டும் என நான்கு வாரங்கள் கால அவகாசம் கொடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே ஜெயக்குமார் இது குறித்து பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தற்பொழுது மாஜி  அமைச்சர்களில் இணையதளம் என தொடங்கி அனைத்திலும் அப்டேட் ஆக இருப்பவர் இவர் ஒருவர் மட்டுமே என்பதாலும் தொடர்ந்து திமுகவை சரமாரியாக விமர்சனம் செய்து வருவதாலும் ஆளும் கட்சியானது மாஜி அமைச்சரை சுற்றி வளைத்து டார்கெட் செய்துள்ளது. இதிலிருந்து அமைச்சர் மீண்டு வெளி வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.