அதிமுகவின் 6 எம்எல்ஏ க்கள் நீக்கம்! ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் யின் அதிரடியான நடவடிக்கை!
முதலமைச்சர் மற்றும் இணை ஒருங்கிணப்பாளர் பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் ஆகியோர் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்தனர்.மேற்கொண்டு அந்த நடவடிக்கையின் அறிவிப்பை நேற்று வெளியிட்டனர்.
அதில் கூறியிருப்பதாவது,கட்சிக்கு எதிராக செயல்பட்டதாலும்,கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும்,கட்சியின் கட்டுபாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும்,கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதாலும்,கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து செயல்பட்டதாலும்,எதிர்கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாலும் கடலூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 6 பேரை கட்சியிலிருந்து நீக்கப்படுகின்றனர் என தெரிவித்தனர்.
அதிமுக எம்எல்ஏ–ஆகவும் மகளிரணி செயலாளராகவும் பதவி வகித்த சத்யா பன்னீர்செல்வம்,பண்ருட்டி நகரமன்ற முன்னால் தலைவர் பன்னீர்செல்வம்,பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பெருமாள்.அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மார்டின் லூயிஸ் என்ற பாபு,நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சவுந்தர்,வீரபெருமாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டறவு வங்கி தலைவர் ராம்குமார் ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர்.அதிமுக தொண்டர்கள் யாரும் இவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது எனவும் அதில் தெரிவித்துள்ளனர்.