அதிமுக உங்களை ஏமாத்திருச்சு.. திமுக பக்கம் வந்துடுங்க!! தேமுதிக வுக்கு பகிரங்க அழைப்பு!!

0
12
AIADMK has deceived you.. Come to DMK's side!! Open call to DMDK!!
AIADMK has deceived you.. Come to DMK's side!! Open call to DMDK!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறப்பிற்கு பிறகு கட்சிக்கு முன்பை விட வலு சேர்ந்துள்ளது. அதை வைத்து சீட் வாங்கி விடலாம் என்று எண்ணத்தில் பிரேமலதா இருந்தார். குறிப்பாக தனது மகனை எம்பி ஆக்கி விட வேண்டும் என்ற எண்ணம் தீர்க்கமாக இருந்தது. இதை வைத்து அதிமுக விடும் காய் நகர்த்திய போது அதனை எடப்பாடி சிறிதும் கூட கண்டு கொள்ளவில்லை. பிரேமலதாவின் அழுத்தமானது கூட்டணி பேச்சுவார்த்தை வரை வந்து முடிந்தது. சீட் கொடுத்தால் தான் கூட்டணி என கூறினார்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த ஆண்டு எம் பி சீட் வழங்குவதாக தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டதுடன் எங்களுடன் தேமுதிக கூட்டணி தொடரும் என்றும் கூறினார். ஆனால் பிரேமலதா இது ரீதியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. மாறாக அதிருப்தியில் உள்ளதாக சுற்று வட்டாரங்கள் கூறினர். இப்படி இருக்கையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இந்தியா கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு தேமுதிகவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தேமுதிக எங்களுடன் இணைவது குறித்து இந்திய கூட்டணியின் தமிழக தலைவர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் அப்படி இவர்கள் எங்களுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் அவர்களை வரவேற்க காத்திருக்கிறோம் என கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி எம்பி சீட் அடுத்த வருடம் தருவதாக தேமுதிகவிற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Previous articleஅப்பா மகன் சண்டைக்கு பாஜக தான் முக்கிய காரணம்!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!
Next articleதுணை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி? வெளியான ஷாக் நியூஸ்!!