எதுவானாலும் அதிமுக தயார்தான்! ஓ.பி.எஸ். அதிரடி பேட்டி!

எதுவானாலும் அதிமுக தயார்தான்! ஓ.பி.எஸ். அதிரடி பேட்டி!

முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில், கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில், 20 க்கும் மேற்பட்ட போலீசார் காவல் காக்கின்றனர். அவர் வீட்டில் தற்போது ரெய்டு நடைபெற்று வருவதால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதன் இணை இயக்குனர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது இதுதான். அதிமுக எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கவும், எதிர்கொள்ளவும், எப்போதும் தயாராகவே இருக்கிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அரசியல் ரீதியாக அதிமுக வை சந்திக்க முடியாமல் திமுக இருக்கிறது. திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறது. திமுக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என்றாலும் சட்டபூர்வமாக எதிர்கொள்ள அதிமுக அரசு எப்போதும் தயார் நிலையிலேயே உள்ளது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், ஜெயலலிதா பல்கலைகழகம் இயங்கக் கூடாது என்பதற்காகவே அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைக்கும் முயற்சியை திமுக செய்து வருகிறது என்றும் கூறினார்.

Leave a Comment