தேமுதிக கூட்டணியால் பலம் பெரும் அதிமுக!! தமிழ்நாட்டில் திமுகவிற்கு கேள்விக்குறியாகும் வெற்றி வாய்ப்பு!!
முன்னால் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர்.கூட்டணி குறித்து முடிவு எடுக்காமல் இருந்து வந்த தேமுதிக அதிமுகாவின் பேச்சுவார்த்தையால் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளனர்.
சென்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவிற்க்கு அதிமுக அணியில் இடம் கிடைக்கவில்லை.ஆனால் இந்த முறை அதிமுகாவே தற்பொழுது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடதக்கது. அடுத்து பாமகவும் கட்டாயம் அதிமுக அணிக்கே கூட்டணி அமைத்துள்ளது.தேமுதிக 4 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுள்ளது.அதிமுக 3 வரை தர சம்மதம் அளித்துள்ளது.
இன்றைய நிலையில் அதிமுக அணி பெரிய கூட்டணி அமையாமல் தடுமாறி வந்தது. எனவே அதிமுகவை பலமாக காட்டுவதற்காக மற்ற முக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.எனவே எப்படியாவது தேமுதிக கேட்கும் சீட் கொடுத்து அதிமுகவின் பக்கம் இழுக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவிற்கு உள்ளது.
அடுத்ததாக பாமகவும் அதிமுக அணிக்குள் வந்துவிடும் பட்சத்தில் அதிமுக அணி வலுவாகிவிடும்.இதன் மூலம் வட தமிழ்நாடு முழுக்க வலுவான கூட்டணியாக அதிமுக மாறிவிடும்.எடப்பாடி பழனிசாமி மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதால் அதிமுக கூட்டணி பலம் அடைந்துள்ளது. இதனால் திமுக கூட்டணிக்கு நெருக்கடிகள் வரும் என அரசியல் வட்டாரங்கள் எதிபார்க்கின்றனர்.