சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தவறான தகவல்களை பரப்பிய இயக்குனர் பா ரஞ்சித்துக்கு அதிமுக தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ்

Photo of author

By Anand

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தவறான தகவல்களை பரப்பிய இயக்குனர் பா ரஞ்சித்துக்கு அதிமுக தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ்

சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தவறான தகவல்களை இயக்குனர் பா ரஞ்சித் குறிப்ப்பிட்டுள்ளதாக அவருக்கு எதிராக அதிமுக தரப்பில் வழக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ரஞ்சித்துக்கும், ஒடிடி தளத்தில் வெளியிட்ட அமேசான் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இந்த படம் திமுக சார்பாக அதிமுகவிற்கு எதிரான கருத்துக்களை பரப்பும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அதிமுக அமைச்சர் குற்றம்சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பா.இரஞ்சித் இயக்கத்தில், நடிகர்கள் ஆர்யா, பசுபதி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் சார்பட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் OTT தளத்தில் வெளியிடப்பட்டது. 1970 காலகட்டங்களில் வட சென்னையில் நடைபெற்ற பாக்ஸிங் கலாசாரத்தை பற்றிய இந்த திரைப்படத்தில் அந்த கால அரசியல் நிகழ்வுகளையும் ஆங்கங்கே காட்டியுள்ளனர்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் பசுபதி எமெர்ஜென்சி காலத்தில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி குறித்து நிறைய வசனங்களை பேசியுள்ளார். குறிப்பாக அதில் மிசாவில் கைது செய்யப்பட்ட போது முதலமைச்சர் மகன் கூட மிசாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற ஒரு வசனம் வருகிறது.

உண்மைக்கு மாறாக உள்ள இந்த வசனத்தை நீக்க வேண்டும் என்று சார்பட்டா பரம்பரை தயாரிப்பாளர் இயக்குனர் ரஞ்சித்துக்கும், ஒடிடி தளத்தில் வெளியிட்ட அமேசான் நிறுவனத்திற்கும் அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஸ்டாலின் பெயர் இல்லை

சமீபத்தில் இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்ட “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தை பலரும் ஒரு வரலாற்று படமாக சித்தரித்து வருகின்றனர்.இவ்வாறு வரலாற்று திரைப்படமாக சித்தரிக்கப்படும் அந்தப்படத்தில் அப்போது நடந்த வரலாற்று நிகழ்வுகளை தவறாக மக்களிடத்திலே பரப்புகின்ற விதமாகவும், உண்மைக்கு மாறான விஷயங்களை, வரலாற்றுச் சம்பவங்களில் இல்லாத ஒரு விஷயத்தை யாரையோ ஒரு நபரை திருப்திப் படுத்த வேண்டும் என்பதற்காக நடக்காத ஒரு விஷயத்தை எந்த ஒரு அரசு ஆவணமும் இதுவரை நிரூபிக்காத ஒரு விஷயத்தை, சம்பந்தப்பட்ட நபர்களே இதுவரை நிரூபிக்காத ஒரு விஷயத்தை அந்தப்படத்தில் இயக்குனர் சொல்லியிருக்கிறார்.

நிரூபிக்ப்படவில்லை

சார்பட்டா பரம்பரை ஒரு வரலாற்று படம் என்று கூறிவிட்டு அதில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை காட்டி மக்களிடத்திலே தவறான தகவலை பரப்புவது சட்டத்திற்கு புறம்பான விஷயம். மேலும் இது மக்களிடத்திலேயும், அரசியலிலே உண்மையாக உழைத்து மக்களுக்காக பணி செய்தவர்கள் இடத்திலேயும் தவறான எண்ணத்தையும் செய்தியையும் பரப்புவதாக அமைந்துவிடும் என்று அவர் அதில் கூறியுள்ளார்.

அறிக்கையை படிக்காத ஸ்டாலின்

மேலும் இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 48 மணி நேரத்திற்குள்ளாக நீங்கள் சொன்ன அந்த செய்திகள் எந்தவித ஆதாரமும் இல்லாமல் எந்தவித அடிப்படையும் இல்லாமல் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டது என்பதை அனைத்து ஆங்கில மற்றும் தமிழ் நாளேடுகளில் பிரசுரித்து வெளியிட வேண்டும் அல்லது அந்த திரைப்படத்தில் வரக்கூடிய குறிப்பிட்ட அந்த வசனத்தை உடனடியாக நீக்கி மறுவெளியீடு செய்ய வேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505

வசனத்தை நீக்குங்கள்

தவறுகின்ற பட்சத்தில் உங்களின் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பை நீங்களே வழங்கி விட்டீர்கள் என்பதாக எடுத்துக்கொண்டு அதற்கான அனைத்து விளைவுகளையும் நீங்கள் சந்திக்க வேண்டும் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன் என அந்த நோட்டிஸில் தெரிவித்துள்ளார்.