ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு! ஆளும்கட்சியின் முதுகில் குத்திய கூட்டணி கட்சி சட்டசபை உறுப்பினர்கள்!

0
119

நேற்றைய தினம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஆரம்பமானது. அந்த சமயத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

அதன்பிறகு அவைக்கு வெளியே எடப்பாடி பழனிச்சாமி பத்திரிக்கையாளர்கள் பேட்டி அளித்ததாவது, தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகமாக இருக்கிறது, துப்பாக்கி கலாச்சாரம், கட்டப்பஞ்சாயத்து, உள்ளிட்டவை மறுபடியும் தலைவிரித்தாடுகின்றன என கூறியிருக்கிறார்.

மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த மழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கினார். ஆனால் தற்போதைய அரசு எந்தவிதமான நிவாரணத் தொகையையும் வழங்கவில்லை என்று குற்றம் சுமத்தி இருக்கிறார்.

சென்ற தைப் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கிய அரசு அதிமுக அரசு, ஆனாலும் தைப்பொங்கலுக்கு பொங்கல் பரிசாக தொகை எதையும் இந்த அரசு வழங்கவில்லை. இது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு இந்த அம்மா மினி கிளினிக் தொடங்கினோம், அம்மா பெயரில் இந்தத் திட்டம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, இந்த திட்டத்தை முடித்து வைத்திருக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவின் நிர்வாகிகள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும், பொய் வழக்கு போடுவது தான் தற்சமயம் வாடிக்கையாக இருந்து வருகிறது. திமுகவின் ஏவல் துறையாக மற்றும் கைப்பாவையாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. இதையெல்லாம் கண்டித்து தான் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

நகை கடன் தள்ளுபடி 13 லட்சம் பேருக்குத்தான் மற்றவர்களுக்கு தகுதியில்லை என தற்சமயம் தெரிவித்திருக்கிறார்கள், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் நகை கடன் தள்ளுபடி குறித்து அழகாக, கவர்ச்சியாக, பேசினார் .இந்த தகுதிகளை முன்பே அறிவித்திருந்தால் 35 லட்சம் பேர் கடனாளியாகியிருக்கமாட்டார்கள். வேதா நிலையம் தொடர்பான வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது மூத்த கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

ஆளுநர் ரவி உரை நிகழ்த்த தொடங்கியவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டசபை உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தார்கள், இது தொடர்பாக அந்த கட்சியின் சட்டசபை குழு தலைவர் சிந்தனைச் செல்வன் வழங்கிய பேட்டியில், சட்டசபையில் ஜனநாயக ரீதியாக எல்லா கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து ஏகமனதாக நிறைவேற்றிய நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா சுமார் 6 மாதங்களாக ஆளுநர் அலுவலகத்தில் கிடப்பில் இருக்கிறது என்று கூறினார்.

தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்துகின்ற ஆளுநரின் இந்த நடைமுறையை கண்டித்து கவர்னர் உரைக்கு எதிர்ப்பு காட்டாமல் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்று அவர் கூறியிருக்கிறார்.

Previous articleசென்னை எம்ஐடி கல்லூரி விடுதியில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோய்தொற்று உறுதி!
Next articleசிறப்பான கவர்னர் உரை ஆற்றப்பட்டிருக்கிறது! அமைச்சர் பரபரப்பு பேட்டி!