அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி! ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன?

Photo of author

By Parthipan K

அதிமுக கட்சியில் பல்வேறு துறைகள் சார்ந்த தலைமை பதவியில் அமைச்சர்  ஜெயக்குமார் அவர்கள் பணிபுரிந்து வருகிறார். நேற்றைய தினம் அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

அக்கூட்டத்தில் கட்சியின் பல்வேறு திட்டங்கள் பற்றியும் பொதுமக்களின் நலன்கள் பற்றியும் ஏற்கனவே செயலில் இருக்கும் திட்டங்களின் முன்னேற்றங்கள்  உள்பட பல செய்திகள்  ஆலோசிக்கப்பட்டு உள்ளது. 

அமைச்சர் D.ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில், அவரிடம் நிர்வாகி முனுசாமிக்கும், அமைச்சர் சண்முகத்திற்கும் இடையில் நடந்த விவாதம் பற்றிக் கேட்ட போது அவர் அளித்த பதில் என்னவென்றால், “ அதிமுக கட்சி  பல தடைகளையும் பல சதிகளையும் முறியடித்து மக்களின் வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறது”  என்றார்.

“மேலும் நேற்றைய தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வேறு எந்த விதமான விவாதமும் நடக்கவில்லை என்றும் கூட்டத்தில் காரமும் இல்லை ரசமும் இல்லை” என்றும் அமைச்சர் ஜெயக்குமார்  கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.