அதிமுக முன்னால் அமைச்சர் மறைவு! சோகத்தில் அதிமுக தலைமை!

Photo of author

By Rupa

அதிமுக முன்னால் அமைச்சர் மறைவு! சோகத்தில் அதிமுக தலைமை!

கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் இந்த வருடம் கொரோனாவின் 2 வது அலை உருவாகி கோரத்தாண்டவம் எடுத்து ஆடுகிறது.தற்போது 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.இந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தினால் அதிக அளவு கொரோனா தொற்று பரவியது.பீகார் மற்றும் மகராஷ்டிராவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அதிகப்படியான மக்கள் பலியாகி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி திரையுலகினர்,அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்றானது இந்த பிரச்சாரத்தின் மூலம் பரவியது.அதில் பல அரசியல்வாதிகளின் உயிர்களும் பலியானது.அதில் ஸ்ரீ வில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா தொற்று உறுதியான நிலையில்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதனையடுத்து மகாராஷ்டிரா முன்னால் எம்.பி கொரோனா தொற்றால் காலமானார்.இவர்களின் இழப்புக்களே பெரும் வேதனையை தருகிறது.அதற்கடுத்ததாக அதிமுக  முன்னால் அமைச்சர் அரங்கநாதன் வயது முதிர்வு காரணமாக காலமானார்.இவர் கோவை தொண்டமுத்தூர்,மேற்கு தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏவாகவும் அதன்பின் அதிமுக ஆட்சியின் கல்வித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.95 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.அதிமுகாவின் மூத்த தலைவர் காலமானதில் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.