கோடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம்! அப்ரூவராகும் OPS ஆதரவாளர் ஆறுக்குட்டி

0
109
Remove term: AIADMK MLA Arukutty AIADMK MLA Arukutty
Remove term: AIADMK MLA Arukutty AIADMK MLA Arukutty

கோடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம்! அப்ரூவராகும் OPS ஆதரவாளர் ஆறுக்குட்டி

அதிமுகவில் நடந்து வந்த ஒற்றைத்தலைமை பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்து எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த அதிகார போட்டியில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி தரப்பு மாறி மாறி எதிர்த்தரப்பு ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி வருவதாக அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று ஓபிஎஸ் ஆதரவாளர்களான வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர் சையது கான், ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் , இளையமகன் ஜெயபிரதீப் உள்ளிட்ட 17 பேர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.பதிலுக்கு ஓபிஎஸ் தரப்பும் எடப்பாடி தரப்பு ஆட்களை நீக்குவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் எடப்பாடி தரப்புக்கு செக் வைக்கும் விதமாக ஓபிஎஸ் தரப்பு காய் நகர்த்தியுள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆளும் திமுக எதிர்க்கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரின் வீடுகளில் தொடர் ரெய்டு நடத்தி வரும் சூழலில் கோடநாடு கொலை வழக்கு விசாரணையும் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை நடந்தது.அப்போது கட்சி சார்பான முக்கிய ஆவணங்கள் பலவும் திருடப்பட்டதாக குற்றசாட்டு பதிவானது.இந்த வழக்கில் பல கட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளன.இதுவரை சுமார் 260 க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவர்களில், முன்னாள் எம்.எல்.ஏவும் ஓபிஎஸ் ஆதரவாளருமான ஆறுக்குட்டியும் பல முறை விசாரிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்புக்கு இடையேயான மோதல் அதிகாரித்து வரும் நிலையில் எதிர்தரப்பை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் ஆறுக்குட்டி அப்ரூவராக மாறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.அவருடைய வாக்குமூலம் அதிமுகவின் முக்கிய புள்ளிகளுக்கு எதிராக இருப்பதால் இந்த வழக்கில் பரபரப்பு கிளம்பியுள்ளது.