TVK: தமிழ்நாட்டில் நடக்க போகும் 2026 வது சட்டமன்ற தேர்தல் பெருமளவு எதிர்பார்ப்புடன் உள்ளது. ஒரு பக்கம் திமுக வலிமையான கூட்டணியாக உள்ள நிலையில் அதனை எதிர்க்க பாஜகவும் கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மோதல் போக்கை தவிர்த்துவிட்டு அதிமுகவை இணைத்துக் கொண்டது. மேற்கொண்டு சீமான் உள்ளிட்ட சிறு கட்சிகளையும் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்படி தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியை பலப்படுத்த முயற்சித்து வரும் சமயத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனித்து நிற்கப்படுகிறார்.
எந்த பக்கமும் கூட்டணியின்றி களத்தில் இறங்க தயாராகி விட்டார். ஆரம்பகட்ட காலத்தில் இவருக்கு பல கட்சிகள் கூட்டணி குறித்து ஆதரவு அளிப்போம் என தெரிவித்தது. ஆனால் அரசியலில் நுழைந்த முதல் நாளிலிருந்து தனது தொகுதி மார்க்கெட்டை தயார் செய்து கொண்டார். அதிலிருந்து சிறிதும் கூட கீழே இறங்குவதில்லை. இதனாலையே பல கூட்டணிகள் இவருக்கு கை கொடுக்காமல் போனது. அதில் ஒன்றுதான் அதிமுக, விஜய்யின் வரைமுறைகளுக்கு ஒத்து வராது என கூறிவிட்டதாக தகவல்கள் வெளியானது.
அந்த வகையில் டெல்லி அரவிந்த் கெஜ்ரவால் எப்படி பாஜக மற்றும் காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டு தன்னுடைய கட்சியை முன் நிறுத்தினாரோ, அதேபோல விஜய்யும் பாடுபட வேண்டியுள்ளது. இதனால் தனது இறுதி படமான ஜனநாயகனை முடித்த கையோடு பட்டித் தொட்டி எங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் மூலம் தமிழக மக்களுடன் இணக்கமாக அதிக வாய்ப்புள்ளது. மாபெரும் வலுப்பெற்ற கூட்டணி கட்சிகளை எதிர்க்க வேண்டுமென்றால் இப்படியான சவால்களை விஜய் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.