ஈரோடு மாவட்டத்தில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்திய அதிமுக தலைமை! வாயடைத்துப் போன முன்னாள் நிர்வாகிகள்!

Photo of author

By Sakthi

ஈரோடு புறநகர் மாவட்டம் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் என்று பிரிக்க படுவதாக அதிமுக தலைமை அறிவித்திருக்கிறது. இதுகுறித்து அதிமுக ஈரோடு மாவட்டம் நிர்வாக வசதி காரணமாக, ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு மாவட்டம் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறது.ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் கருப்பணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். கழக உடன்பிறப்புகள் புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதிமுகவை விட்டு பல நிர்வாகிகளும், உறுப்பினர்களும், தங்களை விலக்கிக்கொண்டு திமுக பக்கம் சென்று கொண்டிருந்த சமயத்தில் அதிமுக கட்சியின் தலைமை மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளானது. அதனை சரி செய்வதற்கான முயற்சிகளில் அந்த கட்சியின் தலைமை ஈடுபட்டது.அதோடு கட்சியை விட்டு யார் சென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் பின்னால் தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று தனக்குத் தானே தைரியம் சொல்லிக்கொள்ளும்படியான பேட்டிகளை அந்த கட்சியின் தலைமை கொடுத்திருந்தது.

இந்த நிலையில், அதிமுகவிற்கு பல புதிய நிர்வாகிகளை அந்த கட்சி அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் தற்சமயம் ஈரோடு மாவட்டம் பிரிக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

அதேபோல இன்னும் பல புதிய நிர்வாகிகள் நியமிக்கபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்ற செய்தியும் வெளிவந்துகொண்டிருக்கிறது. இதனால் அதிமுகவை விட்டு சென்ற நிர்வாகிகள் தற்போது கவலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.