ADMK : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ளது. இந்த இணைப்பில் கட்டாயம் ஓபிஎஸ் சசிகலா டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் கட்சியுடன் ஐக்கியமாகி விடுவார்கள் என்றும் கூறி வந்தனர். ஆனால் அது ஏதும் நடக்கவில்லை. மாறாக பாஜகவுடன் கூட்டணி வைப்பார்கள் என்று எதிர் பார்த்தனர். அதி ரீதியான அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கெல்லாம் எடப்பாடி போட்ட நிபந்தனை தான் கரணம் என கூறுகின்றனர்.
இப்படி இருக்கையில் அதிமுக முன்னாள் நிர்வாகியான பெங்களூரு புகழேந்தி, தற்பொழுது எடப்பாடிக்கு எதிராக களம் இறங்க உள்ளதாக கூறியுள்ளார். இது ரீதியாக சேலத்தில் அவர் பேட்டியளிக்கையில், ஒரு பொழுதும் ஒருங்கிணைப்பு என்ற பேச்சுக்கு எடப்பாடி தலையசைப்பதில்லை, மாறாக கட்சியை அடமானம் அல்லது விற்று விடுகிறேன் என்ற பேச்சை தான் முன் வைக்கிறார். அந்த வகையில் தான் ஓபிஎஸ் சசிகலா என தொடங்கி அதிமுக முன்னாள் நிர்வாகிகள் யாரையும் சேர்க்க தயாராக இல்லை. இது ரீதியாக ஜே சி டி பிரபாகரன் போன்றோர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீண் தான்.
அதிமுக வலுமை பெற நாங்கலெல்லாம் மீண்டும் இணைய வேண்டுமென்று பல தொண்டர்கள் நினைத்திருந்தனர். அதெல்லாம் தவிடு பொடியாகிவிட்டது. மேற்கொண்டு நாங்கள் தங்கள் பக்கம் எவ்வளவு முடிவு எடுக்க வேண்டுமோ எடுத்து விட்டோம். பழனிச்சாமி இருக்கும் வரை அது ஏதும் நடக்காது. இனி வரும் நாட்களில் நாங்கள் தெளிவான முடிவை எடுக்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள மூளை முடுக்கெங்கும் பழனிச்சாமிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய போகிறோம்.
இது ரீதியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பழனிச்சாமிக்கு எதிராக நாங்கள் செய்யும் இந்த பிரச்சாரத்திற்கு பல முன்னாள் எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க உள்ளனர். அதேபோல பாஜக-வால்தான் நாங்கள் தோற்றம் என்று கூறிய சிவி சண்முகம் ஜெயக்குமார் போன்றவரை காணவில்லை. ஜெயலலிதா ஒரு முறை பாஜகவுடன் கூட்டணி வைத்து நான் தவறு செய்து விட்டேன் என்று கூறினார். அதனை நோக்கமாக வைத்து எடப்பாடி சிறிது காலம் நாடகமாடிவிட்டார். சேலத்தில் இருந்து சொல்கிறேன் சொந்த ஊரில் கூட எடப்பாடியால் டெபாசிட் வாங்க முடியாது. வாங்கவும் விடமாட்டோம். என்ன செய்யப் போகிறோம் என்பதை பார் என கூறியுள்ளார்.