நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சி அவ்வளவு தான்… அமமுக ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு… 

Photo of author

By Sakthi

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சி அவ்வளவு தான்… அமமுக ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு… 

Sakthi

Updated on:

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சி அவ்வளவு தான்… அமமுக ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு…

 

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சியின் நிலைமை இப்படித்தான் இருக்கும் என்று டிடிவி தினகரன் அவர்கள் சமீபத்திய அமமுக கட்சி ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார்.

 

நெல்லை ஒருங்கிணைந்த மாவட்ட அமமுக கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் பாளை கிருஷ்ணபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கலந்து கொண்டு பேசினார். அப்போது தான் அவர் அதிமுக கட்சி பற்றி பேசினார்.

 

அமமுக கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் “எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் தற்பொழுது உள்ள பழம்பெரும் கட்சியான அதிமுக கட்சி அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நெல்லிக்காய் மூட்டை சிதறுவது போல சுக்கு நூறாக சிதறிவிடும். அதன் பிறகு எடப்பாடி பழனாசாமி அவர்கள் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.

 

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம்.

 

சினிமாவில் வருவது போல கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை வழக்கை உரிய முறையில் விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி ஓ.பன்னீர் செல்வம் அவர்களுடன் இணைந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆகஸ்ட் 1ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தேர்தலில் தனித்து போட்டியிடவும் நாம் தயாராக வேண்டும்” என்று அவர் பேசினார்.