அதிமுக கட்சி செயலாளர் வெட்டிக்கொலை!!மர்ம நபரை பார்த்து அஞ்சும் மக்கள்!!

Photo of author

By Jeevitha

சிவகங்கை: அதிமுக கிளை செயலாளர் இன்று அதிகாலை அவர் வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் அருகே நாட்டாகுடியைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு வயது சுமார் 70. இவர் அந்த பகுதியில் அதிமுக கிளைச் செயலாளராக உள்ளார். மேலும் அவர் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் எப்போதும் போல் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் மர்ம நபர் ஒருவர் அதிமுக கிளை செயலாளர் கணேசன் என்பவரை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.

அப்போது கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த கொலையை செய்த அதே நபர் ஏற்கனவே அந்த பகுதியில் அதே கிராமத்தை சேர்ந்த பாலு என்பவரையும் வெட்டி உள்ளார். ஆனால் பாலு தப்பி ஓடியதால் அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த கொலை அவரது தனிப்பட்ட பிரச்சனையில் வந்ததா இல்லை கட்சியில் ஏற்பட்ட சதியால் வந்ததா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க வேண்டும் என மக்கள் மத்தியில் புகார்கள் எழுந்து உள்ளது. இதனால் அதிமுக கட்சி செயலாளர் கொலை நடந்தது கண்டு பெரிதும் துயரத்தில் உள்ளார்கள்.