அதிமுக பாஜக-வை வேரோடு குலைக்க ஓபிஎஸ் போடும் பலே திட்டம்!! தயாராகும் மாஸ் கூட்டணி!!

0
261
AIADMK plans to launch OPS to uproot BJP!! Preparing mass coalition!!
AIADMK plans to launch OPS to uproot BJP!! Preparing mass coalition!!

OPS: ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நான்கு முறை முதல்வரான பன்னீர் செல்வத்திற்கு அவர் மறைவிற்குப் பிறகு கட்சியில் கூட இடம் இல்லாமல் போனது.  ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி முன்னின்று பன்னீர்செல்வத்தை ஒதுக்க ஆரம்பித்தார். மேற்கொண்டு இரட்டை இலை இரண்டாக பிரிந்த போது சசிகலா தினகரன் பன்னீர்செல்வம் என அனைவரும் ஒரு அணி சேர்ந்தனர். பின்பு தனித்தனியே கட்சி ஆரம்பிக்கவே பாஜக  வசம் இருந்தனர்.

இதில் தற்போது வரை டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருக்கும் பட்சத்தில் பன்னீர்செல்வம் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளார். அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இருவரும் கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிட்டனர். அச்சமயம்  பாஜக பன்னீர்செல்வத்திற்கு மிகுந்த ஆதரவு கொடுத்து வந்தது. தற்போது சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில் திமுகவை எதிர்க்க பலமான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக பாஜக கூட்டணி இணைந்துள்ளனர்.

இதனால் பன்னீர்செல்வம் வேண்டாத ஆளாக மாறிவிட்டார், அதனால் மோடி அமித்ஷா என பலரும் தமிழகம் வருகை புரிந்த போது தங்களை பார்க்க கூட பன்னீர் செல்வத்திற்கு அனுமதி தரவில்லை. இதனால் உச்சகட்ட கோபம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியி வேண்டாம், அதிலிருந்து வெளிவர வேண்டும் எனக் கூறி வந்தனர். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து பன்னீர்செல்வம் வெளியே வந்தவுடன் ஸ்டாலினையும் சந்தித்து பேசி உள்ளார்.

இவரது நோக்கமே அதிமுக மற்றும் தனக்கு துரோகம் செய்த பாஜகவை முழுமையாக எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான். அந்த வகையில் இவர் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்று கேள்விக்கு?? இவரது ஆதரவாளர்கள் கூறியதாவது, பல ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்த அதிமுகவும் இவரை ஒதுக்கி விட்டது நம்ப வைத்து கழுத்தை அறுத்த பாஜகவும் கண்டு கொள்ளவில்லை. இதனால் பலம் வாய்ந்த கூட்டணியுடன் தான் இணைவார் எனக் கூறியுள்ளனர்.

அதே சமயம் திமுகவுடன் தான் இணைவதாக வதந்தி பரவுகிறது என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கையில் கட்டாயம் விஜய்யுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாம்யில் ஏனென்றால் தென் மாவட்டங்களில் பன்னீர் செல்வதற்கு நல்ல வரவேற்பு உள்ள நிலை அதனை தக்க வைத்துக் கொள்ள எந்த கட்சியும் நினைக்கும் மேற்கொண்டு அதிமுகவிற்கு இது பெரும் அடிதான் என கூறுகின்றனர்.      

Previous articleமரணத்திற்கு பிறகு மனிதன் உயிர் வாழ முடியுமா? ஜெர்மன் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! கட்டணம் 2 கோடி