அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி அந்த கட்சியின் கட்டுப்பாடு மற்றும் விதிகளை மீறி செயல்பட்டதாக தெரிவித்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டாக அறிக்கையின் மூலமாக கட்சியில் இருந்து நீக்குவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள்.
அவருடைய நீக்கத்திற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசை நேரடியாக விமர்சனம் செய்ததுதான். அதற்காக தான் அவர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார் என பரவலாக தெரிவிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இருந்தாலும் அவர் திமுகவுடன் ரகசிய உறவில் இருந்தது தற்சமயம் தெரியவந்திருக்கிறது. அதோடு அதனை மறைப்பதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பற்றி அவதூறாக பேசி இருக்கிறார் என்பதும் தற்சமயம் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.
சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த புகழேந்தி சசிகலா சிறையில் இருந்த சமயத்தில் அவருக்கான உதவிகளை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதன்பின்னர் தினகரன் உடன் நெருக்கமாக இருப்பதற்கு முயற்சி செய்த டிடிவி தினகரன் அவரை புறக்கணிக்க தொடங்கியதாக சொல்லப்படுகிறது. அதன்பின்னர் அதிமுகவில் இணைவதற்கு முடிவு செய்த புகழேந்தி நீண்ட இழுபறிக்குப் பின்னர் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதிமுக செய்தி தொடர்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.
இந்த சூழ்நிலையில், சட்டசபை தேர்தல் முடிவுற்ற பிறகு பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவராக வேண்டும் என்று காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார் புகழேந்தி. அதன் மூலமாக அவர் தன்னை ஓபிஎஸ் ஆதரவாளராக அடையாளப்படுத்திக் கொண்டார். ஆனால் அந்த காணொளிக்கு பின்னால் திமுக செய்த சதித்திட்டம் இருப்பதாக தற்சமயம் தெரிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சியான அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக, இபிஎஸ் ஓபிஎஸ் உள்ளிட்டோர் இடையே கருத்து வேறுபாட்டை அதிகமாகி அதன்மூலம் கட்சியை பலவீனப்படுத்துவது திமுகவின் திட்டம். அதற்காக புகழேந்தியை திமுக பயன்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் காரணமாகவே புகழேந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் போல தன்னை காட்டிக் கொண்டு பன்னீர்செல்வத்தின் மீது குற்றம்சாட்டிய பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அவர்களை விமர்சிப்பது போல பேட்டி கொடுத்ததும் திமுகவின் திட்டமாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதை கவனித்த எடப்பாடி தரப்பினர் ஓபிஎஸ் தரப்பிடம் அவர் உங்களுடைய ஆதரவாளர் இல்லை நம்முடைய கட்சியில் இருக்கும் திமுகவின் ஸ்லீப்பர் செல் என்று தெரிவிக்க ஓபிஎஸ் கையெழுத்துப் போட்டு அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
புகழேந்தி திமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்து வரும் ஒருவருடன் நெருங்கி உறவாடுவது தற்சமயம் தெரியவந்திருக்கிறது. அதோடு விவாதங்களில் அதிமுக தரப்பில் யார் கலந்து கொள்ள வேண்டும், என்ன பேச வேண்டும் போன்ற விஷயங்களும் திமுக தரப்பில் இருந்து அவருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அதன்படி செயல்பட்டு அவரை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சரியாக கணித்து தற்சமயம் அவரை கட்சியில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில்தான் புகழேந்தியின் திட்டம் வெட்டவெளிச்சமாகி கட்சியை விட்டு தாம் நீக்கப்படுவோம் என்பதை அறிந்த அவர் இறுதி சமயத்தில் அன்புமணியை விமர்சித்த காரணத்தால் தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சியில் இருக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த இறுதி சமயத்தில் வெளியான பேட்டிக்கு பின்னணி என சொல்கிறார்கள் அது தொடர்பான விபரம் தெரிந்தவர்கள்.