அரசிடம் அனுமதி கேட்ட ஓபிஎஸ்! உடனடியாக மறுப்பு தெரிவித்த அமைச்சர்!

0
139

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல அரசியல் கட்சி தலைவர்களின் சிலை இருக்கிறது. அவர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என்றாலும் பொது மக்களுக்கு சேவை செய்வதிலேயே தங்களுடைய முழுமையான வாழ்க்கையையும் அர்ப்பணித்துக் கொண்டவர்கள் அந்த தலைவர்கள். அப்படி தமிழகத்தில் பல தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள் அறிஞர் அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, உள்ளிட்ட பலரும் இந்த பட்டியலில் அடங்குவார்கள்.

அப்படி பொதுமக்களுக்கு சேவையாற்றிய தலைவர்களின் சிலைகள் தமிழகத்தில் பல முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு இருக்கின்றன, அதோடு அந்த தலைவர்களின் சிலைகளுக்கு அரசு சார்பாக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகின்றன.அத்துடன் அந்த தலைவர்கள் சார்ந்த கட்சியை சார்ந்த தலைவர்கள் அந்த தலைவரின் பிறந்த நாள் மற்றும் கட்சியின் தொடக்க நாள் உள்ளிட்ட சமயங்களில் அந்த தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதும் காலங்காலமாக நடைபெற்று வரும் ஒரு செயலாக இருக்கிறது.

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை சரியாக பராமரிக்கவில்லை என தெரிவித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை தொடர்பாக அமைச்சர் பொன்முடி வெளியிட்டு இருக்கின்ற பதில் அறிக்கையில், சென்னை காமராஜர் சாலையில் இருக்கக்கூடிய உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டு இருக்கிற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலையை நிறுவிட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பாக அவருடைய பிறந்தநாள் அன்று மாலை அணிவிப்பு மரியாதை செலுத்துவது குறித்து முந்தைய அதிமுக அரசால் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மூலமாக அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார்.

சுதந்திர போராட்ட தலைவர்கள் மற்றும் சுதந்திர வீரர்கள் தியாகிகள் போன்றவர்களின் பிறந்தநாள் மற்றும் அவர்களுடைய நினைவு தினங்களில் மட்டுமே அரசின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் நடைமுறையானது காலம் காலமாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பாக நிறுவப்பட்டு இருக்கின்ற எந்த ஒரு தலைவரின் சிலைக்கும் அரசின் சார்பாக நாள்தோறும் மாலை இடும் வழக்கம் இதுவரையில் பின்பற்றப்படவில்லை. இனிவரும் காலங்களிலும் அவர்களுடைய பிறந்தநாள் அன்று ஜெயலலிதாவின் சிலைக்கு அவருடைய பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி அன்று தமிழக அரசின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் இருக்ககூடிய ஜெயலலிதாவின் உருவ சிலை இணை அதிமுக சார்பாக பராமரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் திருவுருவச் சிலையும் அதனை சுற்றி இருக்கக்கூடிய பகுதியில் தமிழக பொதுப்பணித் துறையால் சுத்தும் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. அரசின் சார்பாக சிலை மற்றும் நினைவகங்கள் அனைத்தும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக சரியான முறையில் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆகவே தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் இடம் வழங்கிடும் நடைமுறை இல்லாத சூழ்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச்சிலை அரசின் சார்பாக தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் பொன்முடி.

Previous articleமூன்றாவது அலை எப்போது ஏற்படும்? சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்!
Next articleசூட்கேசின் உள்ளே பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை!