ADMK : அதிமுக சின்னம் முடுக்கப்படும் அவலம்.. 4 வாரம் தான் அவகாசம்!! உயர்நீதிமன்றம் வைத்த செக்!!

Photo of author

By Rupa

அதிமுக இரண்டாக பிளவு ஏற்பட்டதிலிருந்து  சின்னம் தலைமை பொறுப்பு யாருக்கு என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிச்சாமி தான் என முடிவெடுத்தப் பிறகு அதில் ஏதும் மாற்றமிருக்காது என தொண்டர்கள் நம்பி வந்தனர். ஆனால் தற்போதைய நீதிமன்றத்தின் உத்தரவானது பல திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களால் அதிமுக-வின் தலைமையாக எடப்பாடி தேர்தெடுக்கப்பட்டார். இதற்கு உயர்நீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது, ஆனால் அதிமுகவின் விதிகளின் படி இது செல்லாது என கூறுகின்றனர். ஆதாவது எம்ஜி ஆர் இறந்ததற்கு பிறகு ஜானகி மற்றும் ஜெயலலிதா என இரு அணிகளாக பிரிந்தது. அப்போது ஜானகி பக்கம் தான் அதிகப்படியான செயற்குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

இருப்பினும் தலைமையானது ஜெ அணிக்கு தான் போனது. இந்த முடிவானது கட்சி ரீதியான அணிகள் எடுக்கப்படும் சட்டத்திட்ட வரைமுறைகளை பொறுத்து தான் எடுக்கப்படுமாம். அதை வைத்துப் பார்க்கையில் அதிமுக வின் சட்டத்த்திட்ட விதிமுறை 43 யின் படி அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தலைமையை தேர்ந்தெடுக்க முடியும்.

இதை தவிர்த்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆனால் 2021 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்திடம் செயற்குழு பொதுக்குழு வில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என இருவருக்கும் சம பங்கு இருப்பதாக சான்றிதழ் அளித்துள்ளனர். அதை வைத்துப் பார்கையில் ஓ பன்னீர் செல்வத்தை நீக்கியது செயற்குழு மற்றும் பொதுக்குழு தான் என்பதால் இது செல்லாமல் போக அதிக வாய்ப்புள்ளது.

ஓபிஎஸ் தனது தரப்பு வாதமாக இதனை முன் வைக்கலாம், மேற்கொண்டு உட்கட்சி பூசல் முடியம் வரை அதிமுக சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு மனு போட்டுள்ளனர். ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வழக்கானது நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்த விளக்கத்தை வரும் 19 ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளது.

மேற்கொண்டு இருவரும் நேரில் 23 ஆம் தேதி ஆஜராகுமாரும் தெரிவித்துள்ளனர். தற்பொழுது இதுகுறித்த விளக்கத்தை ஓபிஎஸ் யிடமும் கேட்டுள்ளதால் அதிமுக சின்னம் முடக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.