திருமாவுடன் இணையப்போகும் அதிமுக தவெக.. ஸ்டாலினுக்கு விசிக வைத்த செக்!!     

Photo of author

By Rupa

திமுக கூட்டணி கட்சிகளுக்கிடையே சமீப காலமாக பல சஞ்சலங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை இவை இரண்டும் திமுக மீது மறைமுக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பு தலித் சமூகத்தை சேர்ந்த யாரும் தலைவராக ஒருபோதும் முடியாது என்று கூறியிருந்தார். இதே போல பல மேடைகளில் பேச்சுக்களால் விடுதலை சிறுத்தை மற்றும் காங்கிரஸ் திமுக மீது தங்களுக்குள்ள அதிருப்தியை தெரிவித்து வருகிறது என்றே கூறலாம்.

தமிழகத்தின் அதிக வருவாய் ஈட்டக்கூடிய ஒரு துறை என்றால் அது டாஸ்மாக் தான். அதனை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று அரசையே எதிர்த்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடுத்த மாதம் திருமா மாநாடு ஒன்றை நடத்த உள்ளார். இதற்கு அதிமுக தவெக உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டிற்கு தமிழக வெற்றிக்கான விஜய் அல்லது அவர்களது நிர்வாகிகள் கலந்து கொள்வாரா என்பது மிகப்பெரிய சந்தேகமே அதனை தவிர்த்து அதிமுக கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

2026 சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை கொடி உயர வேண்டும் என்றால் சிறுபான்மையினர் பங்கு இருப்பது கட்டாயம். அதற்கு இந்த நேரம் சரியானதாக இருக்கும் என எடப்பாடி முடிவெடுக்க அதிக வாய்ப்புள்ளதாம். ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சென்ற நேரத்தில் கூட்டணி கட்சியான திருமா இவ்வாறு மாநாடு நடத்துவது குறித்து அறிவிப்பை வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதேபோல இந்த மாநாட்டில் அதிமுக தவெக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ளும் பட்சத்தில் திமுகவிற்கு இது பெரும் அடியாகவே இருக்கும். இதன் மூலம் சட்டமன்றத் தேர்தலில் பெரும் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.