ADMK BJP: அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்த நிலையில் இதனை விரும்பாத சில கட்சிகள் அதிமுகவுடனான உறவை முறித்துக் கொண்டுள்ளனர். அந்த வகையில் அதிமுக பாஜக கூட்டணி ஒத்து வராது எனக் கூறி புதிய தமிழகம் வெளியேறியது. இதனை தொடர்ந்து எஸ் டி பி ஐ கட்சியும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வைக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்திய போதே எஸ் டி பி ஐ சார்பாக அதிமுகவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அதில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்டாயம் நாங்கள் விலகிக் கொள்வோம் என்று கூறியிருந்தனர். அதேபோல அமித்ஷா எந்த தினத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட்டாரோ அதே நாளில் முதல்வர் ஸ்டாலினை எஸ்டிபிஐ கட்சியினர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பானது வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்து தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இது ரீதியாக வழக்கானது ஹை கோர்ட்டிலும் தொடுக்கப்பட்டுள்ளது. இதனையெல்லாம் வைத்து தான் முதல்வரை சந்தித்ததாக கூறியுள்ளனர்.
குறிப்பாக ஸ்டாலின் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினருக்கான இந்த சந்திப்பு முழுக்க முழுக்க நன்றி தெரிவிப்பது தான் என கூறினர். ஆனால் இதன் பின்னணியில் இவர்கள் திமுகவுடன் கைகோர்க்க பேச்சு வார்த்தை நடத்தியதாக கோட்டை வட்டாரம் கூறுகின்றது. அதேபோல அதிமுகவுடன் இருந்த பந்தத்தை முடித்துக் கொண்டு எஸ் டி பிஐ இன்னும் ஒன்பது மாதங்களில் யாருடன் கூட்டணி வைப்போம் என்பதை தெரிவிப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காமல் போகும். இது சட்டமன்றத் தேர்தலில் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தும்.