அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்ப்பு!! விண்ணப்பப் படிவங்கள் நாளை முதல் வழங்கல்!!

Photo of author

By Savitha

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் நாளை முதல் வழங்கப்படுகிறது. முதல் விண்ணப்பப் படிவத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கி துவக்கி வைக்கிறார்.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபெற்றவுடன் முதல் அறிவிப்பாக அதிமுக சட்ட திட்ட விதிமுறைப்படி உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்கள் பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையில் புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் 5 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அறிவித்தார்

அந்த அறிவிப்பின்ப்படி புதிய உறுப்பினர் விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் நிகழ்வை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார்.

அதை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடத்தப்படும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 75 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கவுள்ளார்.