ADMK DMK: அதிமுக வில் உட் கட்சிக்குள்ளேயே நிர்வாகிகளுடன் மனக்கசப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. அதிமுக பாஜக கூட்டணியை தற்போது வரை கட்சிக்குள் பலரும் விரும்பவில்லை. இதனால் கட்சி தலைமைக்கும் நிர்வாகிகளுக்கும் ஒரு உரசல் போக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல தலைமை பதவியிலிருக்கும் எடப்பாடியும் கட்சிக்குள் யாருக்கும் மரியாதை தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை பொதுவெளியில் நிரூபிக்கும் விதமாக, பொது நிகழ்ச்சி ஒன்றில் தம்பிதுரை பேச முற்பட்டபோதும் அவரை தடுத்து நிறுத்தினார்.
அதேபோல செல்லூர் ராஜு எடப்பாடி காரில் ஏற முயன்ற போதும் மறுத்துவிட்டார். இவ்வாறு பொது வெளியில் சக நிர்வாகிகளுடன் எடபாடி பரஸ்பர உறவினை அவமதிப்பது போல் உள்ளது. முன்னதாகவே பாஜக அதிமுக கூட்டணி, தலைமையில் அதிகாரப் போக்கு என எண்ணற்ற காரணங்களால் மூத்த நிர்வாகியான அன்வர் ராஜா, மைத்ரேயன் உள்ளிட்டோர் திமுகவிற்கு சென்றனர். அந்த வகையில் தொடர்ந்து இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி நடந்து கொள்வது அடுத்தடுத்து முக்கிய புள்ளிகளையும் கட்சியை விட்டு வெளியேறச் செய்யும்.
அதிலும் தற்போது எடப்பாடியால் பாதிக்கப்பட்ட நிர்வாகிகளை திமுக குறிவைத்து தூக்கி வருகிறதாம். அந்தவரிசையில் அடுத்து தம்பிதுரை மற்றும் செல்லூர் ராஜூ இருக்கலாம். மேலும் எடப்பாடியின் இந்த போக்கால் அவருக்கு பக்க பலமாக இருந்தவர்கள் கட்டாயம் மாற்றுக் கட்சியை தேடி செல்வதாக அதிமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்தியும் கூறியுள்ளார்.