பாஜக கூட்டணியை உதறி தள்ளும் அதிமுக.. மீண்டும் தலைவராகப்போகும் அண்ணாமலை!!

0
47
AIADMK will throw off the BJP alliance.. Annamalai will be the leader again!!
AIADMK will throw off the BJP alliance.. Annamalai will be the leader again!!

ADMK BJP: திமுகவை எதிர்கொள்ளவும் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இவர்கள் முந்தைய கூட்டணி பிரிவதற்கு அண்ணாமலை தான் முக்கிய காரணம். மறைந்த ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதால் அதிமுக அந்த முடிவை எடுக்க நேரிட்டது. இதனாலையே மீண்டும் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் அண்ணாமலை இருக்கக் கூடாது என்ற நிபந்தனையை அதிமுக வைத்தது.

அதேசமயம் அண்ணாமலையும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நான் பதவியை  விட்டு விலகிக் கொள்கிறேன் என கூறியிருந்தார். அதுமட்டுமின்றி இந்த மறு கூட்டணியில் பல வரையறைகள் போட்டப்பட்டு தான் கூட்டணி அமைக்கப்பட்டது. அதிலும் ஓபிஎஸ் டிடிவி தினகரன் உளிட்டோருடன் கூட்டணி வைத்துக் கொள் என்று எனக்கு ஆர்டர் போடக்கூடாது என்பதை எடப்பாடி தெள்ளம் தெளிவாக கூறிவிட்டார். அதேபோல பாஜகவும், நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக்        கொள்வோம் அதில் தலையிடக் கூடாது என்று பேசிவிட்டது.

இவ்வளவு தெளிவான விதிமுறைகள் போட்டு கூட்டணி வைத்தும் மறைமுக பனிப்போர் இருந்து தான் வந்தது. அதாவது பாஜக, கூட்டணி ஆட்சி தான் என கூறிவந்தது. ஆனால் இதனை எடப்பாடி முழுமையாக மறுத்து வருகிறார். தற்போது அதிமுக கட்சியின் அமைப்பு செயலாளர் அன்வர் ராஜ் கூட்டணி முறையில் ஆட்சி கிடையாது பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதிமுக அதனை தவிடு பொடியாக்கும் எனக் கூறிவிட்டார்.

இதனால் மேலிடம் அதிமுகவுடன் வைத்த கூட்டணியை நிறுத்திக் கொள்ளலாம் என்ற முடிவை எடுத்துள்ளது. இதனால் அண்ணாமலை மீண்டும் பாஜக மாநிலத் தலைவராக வர அதிக வாய்ப்புள்ளதாம். அதுமட்டுமின்றி பாஜகவின் பூத் கமிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயினாரும் இது குறித்த வேதனையை தான் வெளிப்படுத்தினார். அதாவது என்னை கட்சியில் யாரும் மதிப்பதில்லை என மேடையிலேயே புலம்பி தீர்த்தார். இவை இரண்டையும் ஒன்றுபடுத்தி பார்க்கையில் அண்ணாமலை தமிழக பாஜக மாநில தலைவராக மீண்டும் பதவி ஏற்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

Previous articleகணவர் விந்தணுவில் விஷம் என்னுடன் உடலுறவு வைத்துக் கொள்!! பெண்ணிடம் அவதூறாக நடந்த போதகர்!!
Next articleகட்சியில் முக்கியத்துவம் இல்லை! புலம்பிய நயினார் – அண்ணாமலை காரணம்?