பரபரப்பு அதிமுக பெண் நிர்வாகிகள் இடையே நடைபெற்ற குடுமிப்பிடி சண்டை! ஓபிஎஸ் கண்முன்னே உண்டான களேபரம்!

Photo of author

By Sakthi

செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளரான கனகலெட்சுமி தன்னுடைய ஆதரவாளர்களுடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களை சந்திக்க சென்னை பசுமைவழிச் சாலை பகுதியில் இருக்கின்ற அவருடைய வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார்.

அத்துடன் அங்கு அதிமுக விருகம்பாக்கம் மகளிர் அணி துணைச் செயலாளர் மற்றும் மதுரவாயலை சார்ந்த அதிமுக மாவட்ட துணை தலைவர் மஞ்சுளா உள்ளிட்டோர் கனகலட்சுமி மற்றும் அவருடைய ஆதரவாளர்களை தடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் 2 அணிகளுக்கும் வாய்த்தகராறு உண்டாகியிருக்கிறது, வாய்த்தகராறு முற்றி போகவே இரு தரப்புகளும் தங்களுக்குள்ளாகவே மாறி, மாறி, முடியை பிடித்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட அதிமுக மகளிர் அணி துணை செயலாளர் கனகலட்சுமி அபிராமபுரம் காவல் நிலையத்தில் தங்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு புகார் வழங்கினார். இந்த புகாரின் பேரில் அபிராமபுரம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.