பள்ளி மாணவர்களே இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு முந்துங்கள்! தமிழக அரசின் சார்பாக வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

0
59

நாட்டில் இருக்கின்ற பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள், சிறுபான்மையினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள், பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகின்றன. அதனப்படையில் கல்வி உதவித்தொகை திட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்த திட்டம் மூலமாக வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கின்ற மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள். இந்த உதவி தொகையை பெறுவதற்காக ஒரு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது.

அந்த விதத்தில் தகுதியான மாணவர்கள் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற முடியும் என்ற சூழல் இருந்து வருகிறது. கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன் பெறுவதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூலமாகவே விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தற்சமயம் இணையதளம் மூலமாகவும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது, 8′ 9 மற்றும் 10, உள்ளிட்ட வகுப்பு மாணவர்களுக்கு திறன் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 12ம் வகுப்பு வரையில் அவர்களுடைய கல்விக்கு உதவும் விதத்தில், கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

தற்சமயம் நாட்டில் 8ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் தேர்வு வரும் 5ம் தேதி நடைபெறவிருக்கிறது இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 12ம் வகுப்பு வரையில் உதவித்தொகை வழங்கப்படயிருக்கிறது.

இந்தத் தேர்வில் பங்கேற்கயிருக்கும் மாணவர்களுடைய பெற்றோர்களுடைய ஆண்டு வருமானம் 1.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டுமாம் தகுதியான மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், தேவையான விவரங்களை அறிந்து பிப்ரவரி மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என்று அரசு தேர்வு துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதுவரையில் தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் மூலமாக 6995 மாணவ, மாணவிகள், ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகையை பெற்று வருகிறார்கள்.