தொடங்கியது பேச்சுவார்த்தை! விரைவில் தொகுதிப் பங்கீடு!

0
141

தமிழ்நாட்டில் தேர்தல் விறுவிறுப்பு ஆரம்பமாகிவிட்டது இதுவரையில் ஓரளவிற்கு இருந்த தேர்தலுக்காக வேலைகள் இனி வேகம் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.ஆகவே அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. என்னும் அரசியல் கட்சிகளில் மீதம் இருப்பது தொகுதிப்பங்கீடு மற்றும் வேட்ப்பாளர் அறிவிப்பு மட்டுமே என்று சொல்லப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில், பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் கிருஷ்ணன் ரெட்டி மற்றும் சி.டி.ரவி போன்றோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்திக்க இருக்கிறார்கள். இதை தொடர்ந்து தமிழகத்தில் முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்தையும் அவர்கள் சந்திக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முடிவு எடுக்கப்பட்டு அதோடு விரைவாக தொகுதி எண்ணிக்கையும் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏனென்றால் தேர்தலுக்கு மிகக்குறைந்த தினங்களே இருக்கின்றன .அப்படிப் பார்த்தோமானால் இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே இருக்கின்ற சூழ்நிலையில், வேலைகளை அரசியல் கட்சிகள் அனைத்தும் வேகமாக செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

இதற்கிடையே திமுகவின் சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அந்த கட்சியின் பொருளாளர் டி ஆர் பாலு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த குழுவை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அமைத்து உத்தரவிட்டிருக்கிறார். அந்த குழுவில் ஏ .வ. வேலு கே. என் நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர். எஸ்.பாரதி போன்றோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

ஆகவே இந்த குழுவை சார்ந்தவர்கள் கூட்டணியில் இருக்கின்ற மதிமுக மற்றும் விசிக மற்றும் இடதுசாரிகள் காங்கிரஸ், போன்ற கட்சிகளுடன் விரைவாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இனிமேல் மே மாதம் இரண்டாம் தேதி வரையில் தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று சொல்லப்படுகிறது.

Previous articleவன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக பரப்புரை? கடுப்பில் நிர்வாகிகள்!
Next articleதொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்! அவதியில் மக்கள்!