கூட்டணியில் தொடரும் மோதல்! அப்செட்டில் டெல்லி வட்டாரம்!

0
69

கூட்டணியில் இருந்தாலும் கூட, அதிமுக மற்றும் பாஜக இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகின்றது. அதைப் பற்றி கேட்டால் கூட்டணி வேறு கொள்கை வேறு என்று தெரிவிக்கிறார்கள். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடந்து வருகின்ற இந்த சூழலில், கூட்டணியில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சி முதல்வர் வேட்பாளரை தேசிய தலைமையே முடிவு செய்யும் என்று தெரிவித்தது.

செய்தியாளர்கள் சந்திப்பில், உரையாற்றிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன், எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை தேசிய தலைமை தான் அறிவிக்கும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதில் தெரிவித்த அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்ததாவது, பாஜகவின் தேசியத் தலைமை திரு. முருகன் அவர்களை கட்சியை விட்டு நீக்கும் சூழல் உருவாகலாம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலே, புகழேந்தி உடைய இந்த பேச்சுக்கு பாரதிய ஜனதாவின் மாநில பொதுச் செயலாளர் கே. டி. ராகவன் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றளவும் தொடர்ந்து வருகின்றது. அதை தெளிவுபடுத்திய பின்னரும் கூட அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூட்டணி தர்மத்தை மீறி பொறுப்பில்லாமல் பேசுவது ஆச்சர்யமாக இருக்கின்றது என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.

கூட்டணியை சீரழிக்கும் தீய சக்திகளோடு, புகழேந்தி போன்றோர் கைகோர்த்து இருக்கிறார்களோ? என்று சந்தேகம் எழுகின்றது. என தெரிவித்திருக்கின்றார் ராகவன் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை தொடர்பாக பேசுவதற்கு புகழேந்தி போன்றவர்களுக்கு எந்தவித அருகதையும் இல்லை எனவும், அதிமுக தலைமை இவர்களைப் போன்றவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், அவர் தெரிவித்திருக்கின்றார்.