எங்களுடைய கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் இல்லை! பாஜக தலைவர் அதிரடி பேட்டி!

0
124

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக நரேந்திர மோடி தலைமையில் சந்தித்தது. அப்போது தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அதற்கு தேசிய அளவில் இருந்த வரவேற்பைப் பார்த்த நரேந்திர மோடி எப்படியாவது அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து விடலாம் என்று பலமுறை முயற்சித்துப் பார்த்தார். ஆனாலும் அவருடைய முயற்சிக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால் தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சரியான எதிராளி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் என்று பேசப்பட்டது. ஆனால் அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக, மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்தநிலையில், அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணியில் இருக்கின்றன. எங்களுக்கு இடையில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை எந்தவிதமான குழப்பமும் இல்லை, மத்திய அரசு தமிழகத்தில் நன்றாக பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு விருது வழங்கி வருகின்றது ஆனாலும் அமைச்சர்கள் நாங்கள்தான் செய்கின்றோம் என்று பெருமை பாராட்டிக் கொள்கிறார்கள், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை மாநில அரசு புதிய திட்டங்களை கண்டுபிடித்து செயல்படுத்தினால் நான் பொதுமக்கள் பயன்படுவார்கள் ஆனாலும் தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் எந்த விதமான மக்கள் நலம் சார்ந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை என கூறியிருக்கிறார் .

தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை அப்படியே காப்பியடித்து செயல்படுத்தி வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்துவது குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு கருத்து சொன்னால் தான் சரியாக இருக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Previous articleவன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விரைவில் முழுமையான வெற்றி நமக்கு கிடைக்கும்! மருத்துவர் ராமதாஸ்!
Next articleஇன்று ஆரம்பமாகிறது 15வது மெகா தடுப்பூசி முகாம்! சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்!