வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விரைவில் முழுமையான வெற்றி நமக்கு கிடைக்கும்! மருத்துவர் ராமதாஸ்!

0
74

தமிழகத்தில் மிகப்பெரிய சமூகமாக இருப்பது வன்னியர் சமூகம் அந்த சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வெகு நாட்களாக போராட்டம் நடத்தி வந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த கோரிக்கையை முந்தைய அதிமுக அரசு பரிசீலனை செய்து வன்னியர்களுக்கான தனி உள் ஒதுக்கீடு வழங்கியது.

இந்த நிலையில், அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து பல நபர்கள், வழக்கு தொடர்ந்தார்கள் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த இட ஒதுக்கீட்டிற்கு தடைவிதித்தது அதேநேரம் இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக இறுதி தீர்ப்பு வரும் வரை இட ஒதுக்கீடு என்ற பெயரில் கல்வி நிலையங்களில் எந்தவிதமான செயல்பாடும் நடைபெறக் கூடாது என்று தடை விதித்து இருக்கிறது.

அதேநேரம் வன்னியர் சமூகம் முன்னேற கூடாது என்று நினைக்கும் பல சமூகவிரோத கும்பல் இந்த தடையை கேட்டு நீதிமன்றங்களை நாடி அதன் மூலமாக தற்போது இந்த ஒதுக்கீட்டிற்கு தடைபெற்று இருக்கிறது.

இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வன்னிய சமுதாய மக்கள் சமூக கல்வி நிலையில் உயர்த்த வேண்டும் என்ற காரணத்திற்காக, வன்னிய மக்களை ஒன்று திரட்டி 42 வருடங்களாக போராடி வருகிறேன். அந்தப் போராட்டத்தின் பயனாக தான் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் இயற்றப்பட்டது. அதன் பிறகு திமுக ஆட்சியில் வன்னியர் இட ஒதுக்கீடு நடைமுறை செய்யப்பட்டது ஆனால் உயர் நீதிமன்றம் வன்னியர் இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறது என கூறியிருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து என்னுடைய சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக அரசு சார்பாகவும், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதால் அதிலும் இட ஒதிக்கீடு வழங்குவதற்கு வசதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை கேட்டுக்கொண்ட நீதிபதி நாகேஸ்வரராவ் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின்படி கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கை மற்றும் அரசுப் பணி நியமனங்களை ரத்துசெய்ய இயலாது, இனி நடைபெறும் மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கூடாது என்றும், தெளிவாக கூறினார்.

அதே சமயத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை பிப்ரவரி மாதம் 15 மற்றும் 16 உள்ளிட்ட தேதிகளில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்து நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர், அரசு தரப்பு வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ளது.

முன்னரே செய்யப்பட்ட மாணவர் சேர்க்கை மற்றும் அரசு பணி நியமனங்கள் செல்லும் அவற்றை ரத்து செய்ய இயலாது என்றும், தெரிவித்திருக்கிறது. இவை எல்லாமே நமக்கு சாதகமான அம்சங்கள் ஆகும், நம்முடைய தரப்பு நியாயங்களை நீதிமன்றத்தில் துல்லியமாக முன்வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம். தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உறுதியாக இருக்கிறது, இதன் காரணமாக, வன்னியர்களுக்கு சமூகநீதி வென்றெடுப்பதில் நமக்கு மிக விரைவில் முழுமையான வெற்றி கிடைக்கும் என கூறியிருக்கிறார்.