BJP OPS: வரப்போகும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி பல்வேறு கட்சிகள் உள்ளது. மேற்கொண்டு கூட்டணி ரீதியான அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன்படி அதிமுக பாஜக இணைந்துள்ள நிலையில் இவர்கள் மீது அதிருப்தி உள்ள சில கட்சிகள் வெளிவந்துள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து சட்டமன்றத் தேர்தலை களம் காணலாம் என்று ஓபிஎஸ் எண்ணுகிறாராம். அதிமுக பாஜக கூட்டணி இணைந்தவுடன் ஓபிஎஸ் பாஜகவில் இணைந்து செயல்படலாம் என்று எண்ணியிருந்தார்.
ஆனால், எடப்பாடி, ஓபிஎஸ் தினகரன் சசிகலா உள்ளிட்டோரை எக்காரணம் கொண்டு நெருங்க விடக்கூடாது என்று ஆணித்தரமாக கூறிவிட்டாராம். இதனால் ஓபிஎஸ் யிடம் பாஜக நடத்திய பேச்சுவார்த்தை அனைத்தும் வீணாகியது. மேற்கொண்டு தங்கள் கட்சி ரீதியாக காயை நகர்த்தினால் கூட, எடப்பாடி பாஜக கூட்டணி முறித்து விடுவாராம். இதனால் செய்வதறியாது பாஜக குழம்பி வருகிறது.
ஆனால் பன்னீர்செல்வம் பாஜக விற்காக காத்திருப்பதாக தெரியவில்லை, பாஜகவிலிருந்து முழுமையாக வெளியேறி விட்டு புதிய கட்சி தொடங்க ஆலோசனை செய்து வருகிறாராம். இது ரீதியாக மாநாட்டை நடத்தி முடித்துவிட்டு கூட விஜய்யுடன் கூட்டு வைக்கலாம் என்று சக நிர்வாகிகளிடம் பேசியுள்ளாராம். அதேபோல சீமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி முக்கோண கூட்டணியை உருவாக்க மும்பரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் இது ரீதியான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக வாக்கானது சிதறக்கூடும். பாஜக திட்டம் வீணற்று போகும்.