திமுக வில் முக்கிய இடத்தை பெற்ற அதிமுக புள்ளி!! உடனடியாக எடப்பாடி காட்டிய அதிரடி!!

0
897

ADMK DMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 8 மாதங்களில் தொடர உள்ள நிலையில் நிர்வாகிகள் கட்சித் தாவும் நிலையானது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து எடப்பாடி காலம் வரை பார்த்த அன்வர் ராஜா சமீபத்தில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்பியும் மூத்த நிர்வாகியுமான மைத்ரேயன் தற்பொழுது திமுகவில் இணைந்துள்ளார்.

முதன் முதலில் இவர் அரசியலுக்குள் நுழைந்த போது பாஜகவில் காலடி எடுத்து வைத்தார். அங்கு இவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது தான் அதிமுகவில் சேர்ந்தார். நாளடைவில் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு கட்சி இரண்டாக பிரிந்தது, அச்சமயம் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து அவருடன் துணை நின்றார். இப்படியே சிறிது காலம் சென்ற நிலையில் மீண்டும் தொடங்கிய இடமான பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

ஆனால் அதுவும் சிறிது காலத்திற்குத்தான் நீடித்தது. அதனையடுத்து எடப்பாடிக்கு பதவி அதிகாரம் ஆகவே மீண்டும் அதிமுகவில் இணைந்து இவருக்கு எம்பி பதவியும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது இவர் அதிமுகவை விட்டு, தன்னை திமுகவில்  இணைத்துக் கொண்டார். இது ரீதியாக எடப்பாடி பழனிச்சாமி அவரை அடிப்படை உறுப்பினர் பதவியி என கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளார். மேற்கொண்டு திமுகவில் இணைந்ததற்கான காரணமாக அவர் கூறுவதாவதாவது, 2026 ஆம் ஆண்டு நடக்கப்போகும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் அதுதான் விதி அது ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது.

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் கொடியேற்றும் ஸ்டாலின், அடுத்த ஆண்டும் அவரே தான் ஏற்றுவார். கல்வி என தொடங்கி தொழில் வரை அனைத்திலும் முன்னணியில் தமிழகம் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. அந்த வகையில் என்னையும் திமுகவின் சிப்பாய்களில் ஒருவராக இணைக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.

Previous articleநான் உயிரோடு இருக்கும் வரை கூட்டணி என்பது கிடையாது தனித்து மட்டுமே என் மக்களுக்காக தேர்தலில் போட்டியிடுவேன் -சீமான்
Next articleதமிழக வெற்றி கழகம் இக்கட்சியுடன்தான் கூட்டணியா …!இதனை பற்றி விஜய் அவர்கள் இரண்டாம் மாநாட்டில் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு ….