உருவாகப் போகிறது மதுரை எய்மஸ் மருத்துவமனை… டென்டர் வெளியிட்ட அரசு!!

Photo of author

By Sakthi

உருவாகப் போகிறது மதுரை எய்மஸ் மருத்துவமனை… டென்டர் வெளியிட்ட அரசு…

 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு தற்பொழுது மத்திய அரசு டென்டர் கோரியுள்ளது.

 

மதுரையில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை நொடர்பான பணிகள் தொடங்கப்பட்டது.

 

மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர், செயல் இயக்குநர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தனியாக குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.

 

இதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் மட்டும் நடப்பட்டு எந்தவொரு பணியும் நடைபெறாமல் இருந்து வந்தது. பல அரசியல் தலைவர்களும், அரசியல் கட்சியனரும் விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியை தொடங்க வலியுறுத்தி வருகின்றனர்.

 

இதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மத்திய அரசு சார்பில் டென்டர் விடப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவமனை கட்டுவதற்கு தகுதியுள்ள ஒப்பந்தகாரர்களும், நிறுவனங்களும் செப்டம்பர் மாதம் 18ம் தேதிக்குள்ள விண்ணபிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை 33 மாதங்களில் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 2026ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் முடியும் என்று தெரிகின்றது. முன்னதாக தற்பொழுது நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க கட்சியை சேர்ந்த எம்.பி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது