டிக்டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை… நியூயார்க் அரசு அதிரடி நடவடிக்கை!!

0
49

டிக்டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை… நியூயார்க் அரசு அதிரடி நடவடிக்கை…

 

டிக்டாக் செயலியை அரசுக்கு சொந்தமான சாதனங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்துவதற்கு முற்றிலுமாக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ்புக் போன்று சிறந்த பொழுதுபோக்கு செயலியாக டிக்டாக் செயலி இருந்து வருகின்றது. மக்கள் தங்களுக்கு உள்ள திறமைகளை வெளிப்படுத்த உதவும் கருவியாக டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

 

உலகம் முழுவதிலும் கோடிக் கணக்கான மக்கள் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். டிக்டாக் செயலி சீனாவை சேர்ந்தது.  இந்நிலையில் டிக்டாக் செயலியை பயன்படுத்தும் பயனர்களின் தரவுகள் டிக்டாக் செயலி மூலம்  திருடப்படுவதாகவும் தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் சீன அரசின் மீதும் டிக்டாக் செயலி மீதும் பல நாடுகள்  குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

 

ஆனால் அதெல்லாம் இல்லை என்று சீன அரசாங்கமும் டிக்டாக் செயலி நிறுவனமும் மறுத்துவிட்டது. இருப்பினும் இந்தியா உள்பட பல நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்துவிட்டது.

 

அமெரிக்கா நாடு குறிப்பிட்ட சில விதிமுறைகளை வைத்து டிக்டாக் செயலியை அரசு சாதனங்களில் பயன்படுத்த தடை விதித்தது. இதையடுத்து நியூயார்க் நாட்டு நிர்வாகமும் அரசு சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த முற்றிலுமாக தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் மேயரின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

 

டிக்டாக் செயலி தடை குறித்து நியூயார்க் மேயரின் செய்தி தெடர்பாளர் ஜோனா ஆலோன் அவர்கள் “டிக்டாக் செயலி மூலமாக நியூயார்க் நகரின் டெக்னிக்கல் நெட்வொர்க் பிரிவிற்கு அச்சுறுத்தல் உள்ளது என்று சைபர் பிரிவு அறிவுறித்தியுள்ளது. இதன் காரணமாக அரசு சாதனங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. என்று கூறினார்.