எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த முறைகேடு! மருத்துவர்கள் இடமாற்றம்!

Photo of author

By Parthipan K

எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த முறைகேடு! மருத்துவர்கள் இடமாற்றம்!

Parthipan K

AIIMS hospital malpractice! Transfer of doctors!

எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த முறைகேடு! மருத்துவர்கள் இடமாற்றம்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாவலராக பணிபுரிபவர் லால் சிங் சவுபே.இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவருடைய அறுவை சிகிச்சைக்காக ஒரு டாக்டர் லஞ்சம் கேட்டுள்ளார்.அவர் கேட்டதன்பேரில் லால்சிங் சவுபே ரூ 36 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.மேலும் இது தொடர்பாக சக ஊழியர்கள் ஒருவர் லால் சிங் சவுபேக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதனால் கடந்த ஜூன் மாதம் லால் சிங் சவுபே மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் மருத்துவமனையில் நடப்பதை கண்டறிய குழு ஒன்று  அமைக்கப்பட்டது.அந்த குழு விசாரணை நடத்தியது.அந்த விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தது. அந்த மருத்துவர் மற்றொரு நோயாளியிடமும் ரூ34 ஆயிரம் லஞ்சம் வாங்கியதும் தெரியவந்தது.அதனையடுத்து அந்த மருத்துவர் அரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.