உங்கள் வீட்டிற்கு ஏர் கண்டிஷ்னர் பெஸ்டா? இல்லை ஏர் கூலர் பெஸ்டா? கரண்ட் பில் மிச்சமாக இதை பயன்படுத்துங்கள்!

Photo of author

By Divya

உங்கள் வீட்டிற்கு ஏர் கண்டிஷ்னர் பெஸ்டா? இல்லை ஏர் கூலர் பெஸ்டா? கரண்ட் பில் மிச்சமாக இதை பயன்படுத்துங்கள்!

இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு விட்டது என்று சொல்லலாம்.பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வரவே முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்தது.கொளுத்தும் வெயிலை தாக்கி பிடிக்க முடியாமல் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் ஏசி,ஏர்கூலர் வாங்கி பயன்படுத்தினர்.

முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த கோடை காலத்தில் ஏசி,ஏர் கூலர் விற்பனை படு ஜோராக நடந்தது.இதை தொடர்ந்து கோடை வெயிலின் மயக்கத்தை விட கரண்ட் பில் பார்த்து மயங்கியவர் தான் அதிகம் இருப்பர்.இந்த இரண்டு மின்சாதனங்களும் கரண்டை உரிஞ்சுக் கூடியவை.

நாள் முழுவதும் இயங்கக் கூடிய இந்த மின் சாதனங்களில் எது குறைவான மின்சாரத்தை உறிஞ்சும் என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.ஒரு நாளைக்கு 12 மணி நேரம் ஏசியை இயக்கினால் மின் கட்டணம் எவ்வளவு வரும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

1.5 டன் ஏசி ஒரு மணி நேரம் இயங்க சுமார் 840 வாட்ஸ் மின்சாரம் தேவைப்படுகிறது.12 மணி நேரம் இயங்க 10,080 வாட்ஸ் மின்சாரம் தேவைப்படும்.இதனால் ஒரு நாளைக்கு 10 யூனிட் மின்சாரம் செலவாகிறது.அதேபோல் ஒரு மாதத்திற்கு சுமார் 300 யூனிட் மின்சாரம் செலவாகிறது.

அதேபோல் ஏர் கூலர் ஒரு மணி நேரம் இயங்க 400 வாட்ஸ் மின்சாரம் தேவைப்படுகிறது.12 மணி நேரம் இயங்க 4,800 வாட்ஸ் மின்சாரம் தேவைப்படுகிறது.இதனால் ஒரு நாளைக்கு 4.8 யூனிட் மின்சாரம் செலவாகிறது.அதேபோல் ஒரு மாதத்திற்கு சுமார் 150 யூனிட் மின்சாரத்தை செலவாகிறது.இதனால் ஏசியை விட ஏர் கூலர் இயங்க குறைவான மின்சாரம் மட்டுமே தேவைப்படும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.