87 ஆண்டுகளுக்குப் பின் தன் சொந்த கைகளுக்கே வரும் ஏர் இந்தியா நிறுவனம்.ஏர் இந்தியாவை வாங்குவதற்கான ஒரே போட்டியாளராக டாடா குழுமம் உருவெடுத்துள்ளது.கிட்டத்தட்ட 87 ஆண்டுகளுக்கு முன்பு நேரு அரசால் டாடா குழுமத்திற்கு சொந்தமான விமான நிறுவனம் கையகப்படுத்தியது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் டாடாவின் கூட்டு முயற்சியான விஸ்தாராவில் டாடா சேர மறுத்துவிட்டது. இந்த முடிவை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்குவற்கு வாய்ப்புள்ள நிறுவனமாக அரசாங்கம் கருதுகிறது என்று நம்பப்படுகிறது.சாத்தியமான ஒப்பந்தத்தை ஆராய டாட்டா நிறுவனம் சட்ட நிறுவனங்களை ஈடுபடுத்தியுள்ளது. இந்த விருப்பத்தை தீவிரமாக மதிப்பீடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை ஆராயும் குழு பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் முறைசாரா கலந்துரையாடல்களை நடத்தினர்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 31 ஏல காலக்கெடுவை மீண்டும் நீட்டிப்பதில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என கூறப்படுகிறது. முன்னதாக கொரோனா தொற்றுநோயின் காரணமாக காலக்கெடு ஏற்கனவே மூன்று முறை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டாடா தனது மற்ற விமான நிறுவனங்களான ஏர் ஏசியாவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸுடன் இணைக்க முயன்றது.ஆனால் இந்த குழு மலேசியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியாவில் 51% பங்குகளை கொண்டு இயங்கி வருகிறது.
ஏர் இந்தியா தனியார் மயமாக்க ஜனவரி 27 2020 அன்று தொடங்கி ,விண்ணப்பிக்க தொடங்கி மார்ச் 27 கடைசி என அறிவித்துள்ளது. பின்னர் அது ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டு மீண்டும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.
முன்னதாக கடந்த 2018’ஆம் ஆண்டில், மோடி அரசாங்கம் 76% விற்க முன்வந்தது, ஆனால் ஏலம் எடுக்க யாரும் முன்வராததால் அந்த முயற்சி முற்றிலும் தோல்வியடைந்தது.
2020’ஆம் ஆண்டில், அரசாங்கத்திற்கு சொந்தமான விமான நிறுவனத்தில் 100% பங்குகளை வழங்குவதன் மூலம் விற்பனையை அரசாங்கம் மீண்டும் துவக்கியது
வாங்குபவர் ஏர் இந்தியாவின் ரூ 23,286 கோடி கடனுக்கும் பொறுப்பேற்க வேண்டும். மார்ச் 31, 2019 நிலவரப்படி, ஏர் இந்தியாவின் மொத்த கடன் ரூ 60,074 கோடியாக உள்ளது.இந்த நிலையில் மற்ற நிறுவனங்கள் வாங்க முடியும் என்றாலும் டாடா நிறுவனம் தனது பழைய நிலையை உருவாக்க முன்வர இயல்கிறது.