கஜா புயலால் வீட்டையும் கொரோனாவால் தொழிலையும் இழந்து பட்டினியில் வாடும் இந்த குடும்பத்திற்கு தமிழக அரசு உதவுமா?

0
104

கடந்த 2018 வருடத்தில் தமிழகத்தில் பல மாவட்டங்களை கஜா என்னும் புயல் புரட்டிப் போட்டது.அதில் நாகை மாவட்டம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியது.நாகை மாவட்டத்தில் பல பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டது இந்த கஜா புயல். பல்லாயிரக்கணக்கான வீடுகள் இந்த பகுதியில் தரைமட்டமானது.

இந்த புயலின் தாக்கம் இன்னும் அந்த மாவட்டங்களில் ஓய்ந்தபாடில்லை. அதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக ரவி உஷா குடும்பமே சாட்சி.இவர்களுக்கு மதுஸ்ரீ (7),காமாட்சி என்ற கைக் குழந்தையும் உள்ளது.இதில் மதுஸ்ரீயோ பிறக்கும்போதே மாற்றுத்திறனாளியாக பிறந்துள்ளார்.மேலும் சில வருடங்களுக்கு முன்பு சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தத்தினால் ரவிக்கு ஒரு கை மற்றும் கால் வரமால் போனது.

தற்போது இந்த குடும்பத்தினர்
2018-ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் சேதமடைந்த இவர்களின் வீடு மீண்டும் புனரமைக்கப்பட முடியாமல், வீட்டின் நான்கு புறமும் சுவர்கள் இன்றி தார்ப்பாய் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. வயல்வெளிகளிலிருந்து விஷ ஜந்துக்கள் வீட்டின் உள்ளே வந்து செல்லும் பரிதாப நிலையே காணப்படுகிறது. மின்சார வசதியில்லை. மூடிக்கொள்ள கதவுகள் இல்லை.

கஜா புயலின் போது சேதமடைந்த வீடுகளை புதுப்பித்து தருவதாகவும்,
வீடு இழந்தவர்களுக்கு பசுமை வீடு கட்டித் தருவதாக தமிழக அரசு கூறியது.ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அந்தப் பகுதி மக்களின் குற்றச்சாட்டாகும்.

தற்போது அண்டை வீட்டார்கள் ஆதரவு கரம் நீட்டினாலும், அவர்களின் பாதுகாப்புக்கும் மறுவாழ்வுக்கும் ஓர் கான்கிரீட் வீடும், உதவித்தொகையுமே அவர்களை நிரந்தரமாகக் காக்கும்.

இந்த குடும்பம் கஜா புயலால் தனது வீட்டையும் கொரோனாவால் தனது தொழிலையும் இழந்து பட்டினியால் வாடுகின்றனர். இவர்கள் வசிக்கும் அதே பகுதியில்
தமிழகத்தின், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வசித்து வருகிறார் என்பதால், அரசின் உதவியை விரைவில் அமைச்சர் பெற்றுத்தந்து ஆதரவற்றுக் கிடக்கும் ரவியின் குடும்பத்தைக் காக்க வேண்டும்” என்பதே அப்பகுதி மக்கள் அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

author avatar
CineDesk