சீமானிடம் இருந்து கத்தி பறிமுதல்!. விமான நிலையத்தில் பரபரப்பு!.. வாட் புரோ!…

0
11
seeman
seeman

Seeman: நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலில் ஈடுபட்டு வருபவர் சீமான். துவகக்த்தில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதன்பின் திமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். அதன்பின் நான் தமிழர் கட்சியை துவங்கி யாருனும் கூட்டணி அமைக்காமல் தனியாக போட்டியிட்டு வருகிறார்.

அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே இவரின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்பவர் சீமான்.

அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர். ஒருபக்கம், நடிகை விஜயலட்சுமி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டும் சீமானின் மீது இருக்கிறது. ஆனால், அதற்கெல்லாம் பெரிதாக சீமான் விளக்கம் கொடுப்பது இல்லை. இவர் மீது பல அவதூறு வழக்குகளும் இருக்கிறது. அடிக்கடி நீதிமன்றமும் செல்வார்.

கடந்த சில மாதங்களாக பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறார். நிர்மலா சீதாராமனை சீமான் ரகசியமாக சந்தித்ததாக செய்திகள் வெளியானது. மேலும், எஸ்.ஆர்.எம் கல்லூரி விழாவில் அண்ணாமலையுடன் சேர்ந்து கலந்துகொண்டு மோடியை பற்றி புகழந்துபேசினார். திமுகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை இணைத்து ஒரு மூன்றாவது அணியை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அண்ணாமலை இருக்கிறார். எனவே, பாஜக – நாம் தமிழர் கட்சி கூட்டணி அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னைக்கு வருவதற்காக திருச்சி விமான நிலையம் வந்த சீமானிடம் இருந்து பழங்கள் நறுக்கும் கத்திகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். Swiss Knife என சொல்லப்படும் சின்ன கத்திகளை பறிமுதல் செய்ததால் அவர்களுடன் சீமான் வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்திய திருச்சி போலீசார் நாம் தமிழர் கட்சி நிர்வாகியிடம் கத்தியை ஒப்படைத்தனர்.

Previous articleபயப்பட வேண்டாம்.. வருமான வரித்துறையினர் வரமாட்டார்கள்!! கிண்டலாக பேசிய பிரதமர் மோடி!!
Next articleமுழுமையாக விடுவிக்கப்படாத மீனவர்கள் மற்றும் படகுகள்!! இலங்கை அதிபர் சந்திப்புக்கு பின் நிகழ்ந்தது என்ன!!