வாரம் இருமுறை மட்டுமே விமான சேவைகள் இயங்கும்: ? ட்ருஜெட் நிறுவனத்தின் மேலாளர்?

Photo of author

By Pavithra

வாரம் இருமுறை மட்டுமே விமான சேவைகள் இயங்கும்: ? ட்ருஜெட் நிறுவனத்தின் மேலாளர்?

Pavithra

வாரம் இருமுறை மட்டுமே விமான சேவைகள் இயங்கும்: ? ட்ருஜெட் நிறுவனத்தின் மேலாளர்

ட்ருஜெட் விமான நிறுவனம் சார்பில், விமானச் சேவை சேலத்தில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் இயக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஊர் அடங்கின் அடுத்தடுத்த தளர்வுகளில் கடந்த மே 27ம் தேதி விமான சேவை மீண்டும் தொடங்கியது.

தினம்தோறும் சேலத்தில் இருந்து சென்னை வரை இயக்கும் விமான சேவை தற்போது நிர்வாக காரணங்களுக்காக வாரம் இருமுறை மட்டுமே இயக்கப்படும் என்று ட்ருஜெட் நிறுவனத்தின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை சென்னை- சேலம் விமான சேவை திங்கட்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் இருக்கும் என்றும் கொரோனாத் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பிறகு தினந்தோறும் விமான சேவை தொடங்கும் என்றும் ட்ருஜெட் நிறுவனத்தின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

தொற்றின் அச்சத்தால் பெரும்பாலான மக்கள் விமான சேவையை தேர்ந்தெடுத்துள்ளனர்.
திங்கட்கிழமை மட்டும் சென்னையில் இருந்து 35 பயணிகள் சேலத்திற்கு வந்தடைந்தனர். 62 பயணிகள் சேலத்திலிருந்து சென்னைக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.சேலம் விமான நிலையத்தில் தொற்று பரவுதலை தடுக்கும் விதத்தில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காத்திருக்கும் அறை,பயணிகளின் நடக்கும் பாதை,அமரும் இடம், கழிவறைகள் என்று அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மேலும் பயணிகளுக்கு வெப்பநிலை சோதனை செய்யப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.