ஏர்டெல் நிறுவனது தனது 5ஜி ப்ளஸ் சேவையை கடந்த அக்டோபர் மாதத்தில் மக்களுக்கு வழங்கியது, ஆனால் நிறுவனம் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இந்த அதிவேக 5ஜி சேவையை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் 5ஜி சேவையை கூடுதலாக மற்றொரு நிறுவனத்திற்கும் வழங்கியுள்ளது. தற்போது 5ஜி பிளஸ் சேவை லக்னோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது லக்னோ நகரின் கோமதி நகர், ஹஸ்ரத்கஞ்ச், அலிகஞ்ச், ஐஷ்பாக், ராஜாஜிபுரம், அமினாபாத், ஜான்கிபுரம், ஆலம்பாக் மற்றும் விகாஸ் நகர் மற்றும் இன்னும் பிற இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
கூடிய விரைவில் லக்னோவின் இன்னும் பிற பகுதிகளுக்கு ஏர்டெல்லின் 5ஜி பிளஸ் சேவை விரிவுபடுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்டெல் பயனர்கள் 5ஜி சேவையை பெறுவதற்கு சிம்மை அப்டேட் செய்ய வேண்டிய தேவையில்லை. அதாவது நீங்கள் பழைய ஏர்டெல் சிம் மூலமாகவே நிறுவனமா வழங்கக்கூடிய 5ஜியை அனுபவிக்க முடியும். இதற்கு நீங்கள் ஏற்கனவே 4ஜி திட்டத்தை பயன்படுத்துபவராக இருக்க வேண்டியது அவசியம்.
மேலும் 4ஜி சேவையை விட 30 மடங்கு அதிக வேகத்தை நீங்கள் இந்த ஏர்டெல்லின் 5ஜி சேவையில் பெறலாம். கூடுதலாக 5ஜி சேவையை பயன்படுத்த நீங்கள் 5ஜி மொபைலை தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை, உங்கள் மொபைலிலுள்ள செட்டிங்க்ஸை மாற்றிக்கொண்டால் மட்டுமே போதுமானது. மேலும் உங்கள் சாதனத்தில் உள்ள சாப்ட்வேரை அப்டேட் செய்துகொள்ளலாம்.