ஐஸ்வர்ய கடாட்சம் நிறைய தீபாவளியில் இந்த பொருட்களை வீட்டுக்கு வாங்கி வாருங்கள்!!

Photo of author

By Gayathri

ஐப்பசி அமாவாசை நாளான இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த நல்ல நாளில் தீபாவளியை சிறப்பிக்க புது உடை,இனிப்பு,பட்டாசு போன்றவற்றை வாங்கும் நாம் வீட்டிற்கு தேவையான முக்கியமான பொருட்களை மறந்துவிடுகிறோம்.

தீபாவளியில் தங்கம்,வெள்ளி போன்ற பொருட்களை வாங்கினால் மட்டுமே செல்வம் சேரும் என்று பலரும் நம்பிக்கொண்டடிருக்கிறார்கள்.ஆனால் நம்முடைய பணக் கஷ்டம் நீங்க நாம் ஒரு சில பொருட்களை வாங்க வேண்டும்.

தீபாவளி அன்று அவசியம் வாங்க வேண்டிய பொருட்கள்:

வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக மங்களகரமான பொருட்களை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும்.கல் உப்பு,மஞ்சள்,குங்குமம்,மல்லிகை பூ போன்றவற்றை வாங்கலாம்.தங்கம்,வெள்ளி வாங்க முடியாதவர்கள் இந்த பொருட்களை வாங்கி லட்சுமி தாயாருக்கு முன் வைத்து வழிபட்டால் கோடி நன்மைகள் கிடைக்கும்.

அதேபோல் மகாலட்சுமியின் அம்சமான பசுவிற்கு ஏதேனும் சாப்பிட வீங்கி கொடுத்தால் பணக் கஷ்டம் படிப்படியாக குறையும்.அதேபோல் தீபாவளி அன்று புது துடைப்பம் வாங்கினால் மகாலட்சுமி அருள் கிடைக்கும்.துடைப்பம்,மகாலட்சமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது.இந்நாளில் பழைய துடைப்பத்தை அப்புறப்படுத்தி புதிய துடைப்பத்தை வாங்கி வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.இந்நாளில் அதிர்ஷ்டம் பெருக பணத்தட்டுப்பாடு நீங்க லட்சுமி குபேர பூஜை செய்து வழிபடலாம்.அகல்விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும்.