இசைவாணி கானா பாடலில் மாற்றும் இல்லாமல் பிக்பாஸ்-லும் பிரபலமாக உள்ளார். இவர் கானா பாடல் பாடிக்கொண்டிருந்த சதீஷ் என்பவரை காதல் செய்துள்ளார். பிறகு 2019-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்கள். இந்த நிலையில் திருமணமான ஒரு வருடலத்திலே இருவரும் பிரிந்து வாழ்ந்தார்கள். இவர் தனியார் தொலைக்காட்சியில் கானா பாடல் பாடி மக்கள் மனதை கவர்ந்துள்ளார்.
மேலும் இவர் பல மேடை நிகழ்ச்சியிலும் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று பாடல்கள் பாடி மக்கள் மனதை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் இவர் பாடிய பாடல் ஒன்று ஐயப்ப பக்தர்களை சீண்டும், விதமாக அமைந்துள்ளது. அந்த பாடல் என்னவென்றால் “ஐ ஆம் சாரி ஐயப்பா… நான் உள்ள வந்த என்னப்பா..நான் தாடி கரன் பேபி..இப்போ காலம் மாறி போச்சு.. நீ தள்ளி வச்ச தீட்டா.. நான் முன்னேறுவேன் மாசா..” என்ற பாடலை பாடி ஐயப்ப பக்தர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் இந்த பாடலில் ஐயப்ப கோவிலுக்கு பெண்கள் வந்தால் என்ன ஆகும் என கேட்கும் நோக்கத்தில் உள்ளது. ஐயப்ப கோவிலுக்கு 10 வயது உட்பட்ட பெண் குழந்தைகளும் மற்றும் 60 வயதிற்கு மேலான பெண்கள் மட்டுமே கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்களிடையே கானா பாடல் இசைவாணி பெரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும் என பலராலும் கூறப்படுகிறது.