இந்தியில் ரீமேக் ஆகும் கைதி… இயக்குனர் இவரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

0
203

இந்தியில் ரீமேக் ஆகும் கைதி… இயக்குனர் இவரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்திற்கு பின்னர் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. இந்த படம் தீபாவளி நாளில் விஜய்யின் பிகில் திரைப்படத்தோடு வெளியாகியது. ஆனாலும் பிகில் படத்துக்கு நிகரான வெற்றியை கைதி பெற்றது .இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார்.

விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு திரைப்படத்தில் பாடல்கள் இல்லை, கதாநாயகி இல்லை, முழுக்க முழுக்க ஆக்ஷன் மட்டுமே இருந்தது. இவ்வாறு ஒரு திரைப்படம் வந்தால் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த வழக்கத்தையெல்லாம் தகர்த்தெரிந்து இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து கைதி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து கைதி படத்தின் இந்தி ரீமேக் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. கார்த்தி வேடத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். அடுத்த ஆண்டு ரிலீஸ் என்று அறிவிக்கபப்ட்ட நிலையில் தற்போது படத்தை அஜய் தேவ்கன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் இரண்டு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஎன்ன ஒருநாள் போட்டி போல விளையாடுறாங்க?… வெற்றியை நெருங்கும் இங்கிலாந்து!
Next articleஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு!  இவ்வாறு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் !