Breaking News

அஜித் லாக்கப் மரணம்.. நீயெல்லாம் முதல்வராக இருக்க தகுதி இல்லை-ஆ ராசா சரமாரி கேள்வி!!

Ajit Lockup's death.. You are not fit to be Chief Minister- Ah Raza barrage of questions!!

DMK: தமிழ்நாட்டில் அஜித் குமாரின் லாக்கப் மரணம் குறித்த பேச்சுதான் பரபரப்பாக உள்ளது. நடந்த அசாம்பாவித்திற்கு பொறுப்பேற்காமல் உயிர் போனதுக்கு Sorry என்று சொல்லி முடித்துவிட்டனர். இதே போல அதிமுக ஆட்சி காலத்தில் சாத்தான்குளம்  லாக்கப் மரணம் நடந்த போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவை சேர்ந்த ஆ ராசா ஆளும் கட்சியை நோக்கி பல கேள்விகளை முன் வைத்தார். நல்ல முதலமைச்சர் என்றால் லாக்கப் மரணத்திற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

காவல்துறையை தங்களது கட்டுப்பாட்டில் கூட வைக்க முடியவில்லை, சர்வ சாதாரணமாக பதில் அளித்தால் எப்படி?? நீங்கள் முதலமைச்சராக இருப்பதற்கு தகுதியே இல்லை என்று சரமாரியாக பேசியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. தற்போது திமுக ஆட்சி செய்து வரும் நிலையில் காவலாளி அஜித்குமாரின் லாக்கப் மரணமானது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் தற்போது மட்டும் காவல்துறை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை?? உங்களது தலைவர் முதலமைச்சராக இருக்க தகுதி இல்லையா?? என்று பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆ ராசா அப்போது எதிர்க்கட்சியாக இருந்து வைத்த கேள்விகள் அனைத்தும் அவருக்கு எதிராகவே திரும்பி உள்ளது. நேரமிருந்தால் ஆ ராசா கேட்கும் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லட்டும் என கூறி வருகின்றனர்.

அஜித் லாக்கப் மரணம்.. காணமல் போன ஜெய்பீம் சூர்யா!! DMK வை சப்போர்ட் செய்யும் டாப் நடிகர்கள்!!

ஏழு நாள் ஓய்வு உனக்கு பத்தலையா? பும்ராவை வறுத்தெடுக்கும் முன்னாள் ஜாம்பவான்கள்!