இனியும் ரசிகர்களைக் காக்கவைக்க கூடாது… அஜித் 61 பட டைட்டிலை அறிவிக்க உள்ள படக்குழு!

0
207

இனியும் ரசிகர்களைக் காக்கவைக்க கூடாது… அஜித் 61 பட டைட்டிலை அறிவிக்க உள்ள படக்குழு!

அஜித் நடிப்பில் H வினோத் இயக்கி வரும் படத்தை ரசிகர்கள் அஜித் 61 என அழைத்து வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியானது. அன்று தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவி நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாள் என்பதால் அன்று வெளியாகும் என எதிர்பர்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக அன்றைய தினம் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இப்போது விசாகப்பட்டணத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பு முடிந்ததும் செப்டம்பர் முதல் வாரத்தில் ‘அஜித் 61’ படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படத்தின் போதும் இதுபோல ரசிகர்களுக்கு எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருக்க, ரசிகர்கள் வலிமை அப்டேட் என்பதை ஒரு பிராண்ட்டாகவே மாற்றினர். இந்தமுறை அதுபோல எதுவும் நடக்கக் கூடாது என்பதால் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித் தற்போது பைக் ரேஸ் சம்மந்தமான காட்சிகளில் நடித்து வருவதாக சொலல்ப்படுகிறது.

Previous articleசிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட அப்டேட்டை வெளியிட்ட உக்ரைன் நடிகை மரியா!
Next articleரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்!